பக்கம்:இரு விலங்கு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xiv

பிரமதேவன் பங்கேருகனகவும் (!), நான்முகனகவும் (2) வருகிருன். அவன் படைப்புத் தொழிலுடையன் (2); தருக் குற்றமையால் முருகனல் தளையிடப்பட்டவன் (1)

வானவர், தங்களுக்கெல்லாம் மேலான தே வ ளு க முருகனை வைத்து வணங்குகிருர்கள் (2): சூரனைக் கண்டு பயந்து விண்டு ஓடினர்கள். முருகன் அவனைச் சங்கா ர ம் செய்தமையால் அச்சத்தினின்றும் நீங்கினர்கள் (4); அவர் கள் வாழும் விண்ணில் கற்பகமரச் சோலையும் வா வி யு ம் உள்ளன. (5).

வள்ளி நாயகி செந்நிறம் பெற்ற மானுக்கு மகளாகத் தோன்றினுள் (3) ஆதலின் செம்மான் மகள் என்று அப் பெருமாட்டியைக் குறிக்கிருர், அவளுக்காக முருகன் ஏங் கிஞன், தினைப்புனத்தில் கிளிபோல அமர்ந்து காவல் புரிந் தாள். ஆ த லி ன் தெள்ளிய ஏனலிற் கிள்ளை எ ன் று ம் கள்ளச் சிறுமி என்றும் வள்ளிநாயகியைக் குறிக்கிருர்

அடியார்கள் முருகனே நாடி அடைந்து புரியும் தொண்டு வகைகளை இப் பாடல்கள் சில இடங்களில் சொல்கின்றன; அடியார்கள் அவன் உள்ள தலத்துக்குச் சென்று கண்டு தொழுவார்கள்: கண்ணுல் அவன் திருவுருவ அ ழ கை க் கண்டு, நமக்கு நாலாயிரம் கண் இ ல் லே யே! என்று வேசாறுவார்கள் (2): அவனை வாழ்த்துவார்கள் (3); அவ னுடைய திருவடியை லட்சியமாகக் கொண்டு அதை வேட் பார்கள் (6); அது புண்டரிக மலரைப் போலப் பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு இன்புறுவார்கள். பின் னு ம் அண்டி நெருங்கி அப்புண்டரிகத் தாள் தண்டை அணிந்து அழகு பெறுவதை உணர்ந்து மகிழ்வார்கள். அதன் அழகை மொண்டு அது ஞானமயமாக இருப்பதை உணர்வார்கள். அப்பால் அதனையே உண்டு சுத்த ஞானமாகிய ஆனந்த நிலை யில் ஒன்றுவார்கள், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/16&oldid=539394" இருந்து மீள்விக்கப்பட்டது