பக்கம்:இரு விலங்கு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரு விலங்கு

பிறப்பும் இறப்பும்

மனிதனுடைய வாழ்வின் எல்லேகள் இரண்டு. ஒன்று பிறப்பு, மற்ருென்று இறப்பு. வாழ்க்கை என்று சொல் வதே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது. இறப்பு, பிறப்பு என்பன உடம்பைச் சார்ந்தன. ஆனல் அவற்ருல் வரும் துன்பங்கள் உடம்போடு கூடிய உயிரைச் சார்ந்துள்ளன. இந்த இரண்டையும் நோய் என்று சொல்வார்கள். பிறப்பு உண்டானல் இறப்பும் நிச்சயம் உண்டாகும், பிறப்பினல் தோன்றி வளர்கின்ற உடம்பு அழிவது இறப்பாகும். மலபாண்டமாகிய இந்த உடம்பு நெடுங்காலம் இ ரு க்கு .ெ ம ன் று ம், இதனே வைத்துக் கொண்டு இறவாத வாழ்வு வாழலாம் என்றும் சொல்வது வெறும் கற்பனேயே தோற்றம் உண்டேல் ஒடுக்கம் உண்டு என்பது ஒரு நியதி.

பிறந்தவர்கள் மீட்டும் பிறக்காமல் இருக்கும் நிலையை அடைவதுதான் முத்தி என்பது. சரீரத்தின் தொடர்பு இல்லாமல் இருக்கிற நிலேயே முத்தி எனப் படுவது. எப்போதும் உயிரானது உடம்போடு சேர்ந்து தான் இருக்கும் அல்லது இறைவன் திருவடியில் ஒன்றி இருக்கும், உடம்புகள் மூன்று என்பதும், பிறப்பினுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/23&oldid=539401" இருந்து மீள்விக்கப்பட்டது