பக்கம்:இரு விலங்கு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 இரு விலங்கு

புற உடம்பாகிய ஊன் உடம்பு உண்டாகிறது என்பதும், எல்லாக் காலத்தும் உயிரானது உடம்போடேயே இருக்கும் என்பதும் முன்னலே காம் அறிந்தவை. உடம் பின் தொடர்பு இல்லாமல் விடுபட்டு உயிர் இறைவளுேடு ஒன்று பட்டு வாழ்வதே முத்தியின்பமாகும்.

பிறப்பும், இறப்பும் தொடர்ந்து வருவன. இறப்பு உண்டானவுடன் மீட்டும் அந்த உயிரானது வேறு புற உடலே எடுத்துக்கொள்ளும். இடைப்பட்ட காலத்தில் சூட்சும உடம்போடு நின்று இன்ப துன்பங்களே அதுபு விக்கிறது. அவற்றையே சொர்க்க கரகம் என்று சொல் வார்கள். அந்த உடம்பை யாதன சரீரம் என்று சொல்வது வழக்கம். எப்படியும் உடம்போடு நின்று உயிர் அநுபவத்தைப் பெறுகிறது. பரு உடலோடு இருக்கிற வாழ்வே நமக்குப் பிரத்தியட்சமாகத் தெரி கிறது. இந்த வாழ்வின் தொடக்கத்தைப் பிறப்பு

என்றும், முடிவை இறப்பு என்றும் சொல்கிருேம். பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டும் போகவேண்டுமாளுல் மெய்ஞ்ஞானம் வரவேண்டும். ஆண்டவனுடைய திரு வருளால் பெறுவது அது. -

இந்த உலகத்தில் உணவு இன்மை, சுகம் இன்மை

முதலியவற்ருல் பெறும் துன்பங்களே ஒரளவு நம்முடைய முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம். ஆளுல் பிறப்பு இறப்புத் துன்பங்களே மாற்றுவதற்கு இறைவன் திருவருள் அவசியம் வேண்டும். அவனுடைய திருவரு ளால் மெய்ஞ்ஞானம் உண்டாக, அதன் பயனகப் பிறப்பு இறப்பு நீங்கவேண்டும் கடவுளின் பெருமையைச் சொல்லும்போது அவன் பிறப்பையும், இறப்பையும் நீக்குகிறவன் என்பதைப் பல பெரியவர்கள் குறிப்பித் திருக்கிருர்கள். . . -

- பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்.

இறைவனடிசேரா தார்'

என்பது திருக்குறள். - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/24&oldid=539402" இருந்து மீள்விக்கப்பட்டது