பக்கம்:இரு விலங்கு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரு விலங்கு 15

'முன்பு ஒரு விலங்கு காலில் பூட்டினன். இப்போது அதே காலில் இரட்டை விலங்கு போடுவான்’ என்று பொருள் கொள்ளக் கூடாது. மீண்டும் தவறு செய்தால் அவ லுக்குக் கடுமையானதண்டனை விதிக்கவேண்டும். ஆகவே முன்பு ஒரு விலங்கு போட்டான்; இப்போது இருவிலங்கு போடுவான். இங்கே இருவிலங்கு என்ருல் காவிலும், கையிலும் போடும் விலங்கு என்று கொள்ளவேண்டும்,

தனக்குத் தவறு செய்தால் ஒரு பங்கு தண்டனே கொடுப்பவன் தன்னுடைய அடியார்களுக்குச் செய்த பிழைக்காக இரண்டுபங்கு தண்டனே செய்வான். தனக் குச் செய்கிற அட்சாரத்தைக் காட்டிலும் தன் அடியார் களுக்குச் செய்கிற அபசாரத்திற்காகப் பின்னும் கடுமை யாகத் தண்டிப்பான். ஆதலால் முன்பு பிரமன் தனக்குச் செய்த தீங்கை உணர்ந்தபோது ஒரு விலங்கு போட் டவன். தன் அடியார்களுக்குச் செய்த தீங்கை உணர்ந் தால் இரட்டை விலங்கு போடுவான். அப்போது தன்சீனக் காணுமல் நடந்த காலுக்கு விலங்கு போட்டான். இப் போது அந்த விலங்கோடு பட்டோலேயில் எழுதிய கைக்கும் சேர்த்து இரட்டை விலங்காகப் போடுவான். காலுக்கும் கைக்கும் விலங்கு போடுவது உலக வழக்கம்.

தொட்டாரைச் சொல்லியழு தோள்விலங்கு போட்டு வைப்போம் கண்டாரைச் சொல்லியழு - கால்விலங்கு பூட்டி வைப்போம்" என்று தாலாட்டுப் ೬೯೬೩) வருகிறது.

பழைய அநுபவத்தை மறந்து பிரமன் தவறு செய் தால் முன்னே கிடைத்த தண்டகனயைப் போல இரு

மடங்கு தண்டனை அவனுக்குக் கிடைக்குமாம். முன்பு அவன் நடக்க முடியாமல் க்ளயிட்டான். இப்போதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/37&oldid=539415" இருந்து மீள்விக்கப்பட்டது