இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரு விலங்கு 1?
அரற்றவும் பொலிவுபெற்ற கிரெளஞ்ச மலை புலம்பவும் எழுந்தருளும் எம்முடைய தலைவனகிய முருகன் அறிந்தால், இனிமேல் பிரமனுக்கு முன்பு போட்ட ஒரு விலங்கன்றி இரண்டு விலங்கு இடப்பெறும்,
பட்டோலே-கணக்கு முதலியன எழுதும் ஒலை. அறிந் திலனே-எண்ண வில்லையோ தனி-ஒப்பற்ற ஒதம்-கடல்: வாய்விட-ஒலிக்க சிலம்பு புலம்ப தன் திருவடியில் உள்ள சிலம்பு ஒலிக்க என்றும் பொருள் கொள்ளலாம். வாய்விட, புலம்ப, எடுத்து வரும் எங்கோன் என்க.
பட்டோலையில் இட என்பது, இடுவதாக இருந்தால் என்னும் பொருளுடையது. -
இது கந்தர் அலங்காரத்தில் 89ஆவது பாட்டு. .