பக்கம்:இரு விலங்கு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டையம் புண்டரிகம் §5

உண்டாக்கத் துணே நிற்பது போலவே அநுபவத்தை உண்டாக்குவதற்கும் துணேயாக இருப்பது அது. சாதன மாக இருக்கும்போது ஞானமாகவும், சாத்தியமாக இருக் கும்போது பேரின்ப அநுபவமாகவும் அது இருக்கும். ஒரு க ம் ட வளி ைய வைத்துக்கொண்டிருக்கிறவன் வீட்டுக்குப் போகும்போது குளிருக்கு அதைப் போர்த்திக் கொண்டு போகிருன். வீட்டுக்குப் போனவுடன் அதையே படுக்கையாக விரித்துப் படுத்துக்கொள்கிருன். வழியில் துணே செய்ததும் அதுதான். வீட்டில் துணையாக இருப் பதும் அதுதான். அந்த வகையில் எம்பெருமான் திருவடி அன்பர்களுக்கு ஞானமாக முதலில் தோன்றி, பின்பு ஆனந்தமாக நிற்கும். இந்த இரண்டையும் அருணகிரி, நாதர் சொல்கிருர் இப்போது பார்க்கப் போகும் பாடலில் அவன் திருவடி சுத்த ஞானமாக இருக்கும் என்று சொல்லப் போகிருர் வேறு ஒரிடத்தில்,

பொக்கக் குடிலில் புகுதா, ಎmagā- fa த்திலும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் - என்று அந்தக் திருவடியையே வீடாகச் சொன்னர். எம்பெருமானே ஞானத் திருவுருக் கொண்டவன்.

நீயான ஞான விநோதந்தனை என்று நீயருள்வாய் சேயான வேல் கந்தனே' என்று முன்பு ஒரு பாடலிலே அருணகிரி நாதர் சொன்ன தைப் பார்த்தோம். gpgāಶಿನ, "ஞான பண்டித சாமி என்று திருப்புகழில் பாடுவார்

முருகன் ஞானமே உருவானவன் என்ருல் அவன் திருவடி ஞானம் என்பதில் தவறு என்ன? கற்கண்டுக் கட்டியில் எந்தப் பகுதியும் இனிப்புடையதுதானே?

இறைவனுடைய திரு உருவம் எல்லே கடந்த், அதனே முழுவதும் காண்பதற்கு நம்மால் முடியாத்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/87&oldid=539465" இருந்து மீள்விக்கப்பட்டது