பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
இறுமாப்புள்ள இளவரசி
 

“எதில் ஏறுவதா? என்னைப் போல் குதிரைபமீது ஏறிக்கொள்ǃ இது தெரியவில்லையா உனக்கு”

"நாணல் குச்சிமீது என்னை ஏறிக்கொள்ளும்படி சொல்லி என்னைப் பரிகாசம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தக் குச்சிதான் குதிரை என்று என்னை நம்பச் சொல்லுகிறீர்களா?”

"வீண் வார்த்தைகள் வேண்டாǃ ’ஏறு’ என்றால் ஏறுǃ” என்று குள்ளன் வெகுண்டு கத்தினான்; "இதுவரை நீ ஏறிய குதிரைகளெல்லாம் இந்தக் குதிரையின் கால் தூசிக்கு இணையாக மாட்டாǃ" எதோ குள்ளன் வேடிக்கை செய்கிறானென்றும், அவன் கட்டளையை மீறுவது குற்றமென்றும் கருதி, தானியேல் நாணலைக் குதிரை போல் முன்னால் நீட்டி வைத்து, அதன் மேல் காலைத் துாக்கிப் போட்டுக் கொண்டான்.

குள்ளன், ’பொர்ரம்ǃ பொர்ரம்ǃ பொர்ரம்ǃ’ என்று மும்முறை கூவினான். தானியேலும் அவ்வாறே கூவினான். அந்தக் கணத்திலேயே நாணல்கள் இரண்டும் பருத்து வளர்ந்து இரண்டு வண்ணக் குதிரைகளாகிவிட்டனǃ இரண்டும் வேகமாகப் பாய்ந்து செல்லத் தொடங்கின. தானியேல், குள்ளனைப் பார்த்து, அவன் நாணலை வைத்துக்கொண்டது போல் வைத்துக்கொள்ளாமல், தன் நாணலைத் தலைமாற்றி வைத்திருந்ததால் அவனுடைய குதிரை புறப்படும்பொழுது அவன் குதிரையின் வாலைப் பார்த்து அமர்ந்திருந்தான். குதிரையை நிற்கச்செய்யவும் வழி தெரியவில்லை. எனவே, அவன் குனிந்து, அதன் வாலைப் பலமாகப் பிடித்துக்கொண்டு சென்றான்.

வெகுநேரம் பிரயாணம் செய்தபின் அவர்கள் ஒர் அழகான மாளிகை முன்பு வந்து நின்றனர். குள்ளன், "தானியேல், இனி நான் செய்கின்றவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டு நீயும் அதைப் போலச் செய்ய வேண்டும் என் பின்னால் தொடர்ந்து ஒடி வா! ஏற்கனவே உனக்குக் குதிரையின் வால் எது, தலை எது என்பதே தெரியவில்லை. இனியும் தலை கிறங்கிப்போய், நீ காலூன்றி நிற்கிறாயா, தலைகீழாக நிற்சிறாயா என்பது கூடத்