பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இறுமாப்புள்ள இளவரசி
7
 

மகளை அழைத்து, "நாளைக் காலையில், முதலில் எந்தப் பிச்சைக்காரன் அல்லது இராப்பாடி அரண்மனைப்பக்கம் வந்தாலும், அவனுக்கே உன்னைத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன்!” என்று அறிவித்தார்.

மறுநாள் சூரியன் உதிக்குமுன்பே, வாயிலில் இசைக் குரல் கேட்டது. உடல் முழுதும் கந்தல் துணிகள், பிடரிவரை படர்ந்து தொங்கிக்கொண்டிருந்த தலைமயிர், முகமனைத்தும் சிவப்புத் தாடியும் மீசையும் கொண்டு காட்சியளித்தான் ஒரு பிச்சைக்காரன். அரசர் உடனே அரண்மனைக் கதவுகளைத் திறக்கும்படி உத்தரவிட்டார். பிச்சைக்காரன் உள்ளே முன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டான். உடனே பாதிரியாரும் வரவழைக்கப்பட்டார். இளவரசிக்கும் தாடிக்காரனுக்கும் திருமணம் நடந்தேறியது. அவள் கூவினாள், கதறினாள், உறுமிப் பார்த்தாள், ஒன்றும் பலிக்கவில்லை. அரசர் அவளைப் பொருட்படுத்தவே இல்லை. அவர் மணமகனைப் பார்த்து, "இந்தா, இதோ ஐந்து பவுன்கள் இருக்கின்றன. இவைகளை வாங்கிக் கொண்டு, உன் மனைவி என் கண்முன் நில்லாதபடி உடனே அழைத்துப் போ ! இனி மறுபடி நீயோ அவளோ என் கண்ணிலே படக்கூடாது! " என்று வாழ்த்தியனுப்பிவிட்டார்.

பிச்சைக்காரன் தன் நாயகியை அழைத்துக்கொண்டு வெளியே நடந்து சென்றான். அவளுடைய துயரமோ சொல்லுந்தரமன்று. ஆனால், அவள் கணவனுடைய பேச்சிலும் செயலிலும் அன்பும் மரியாதையும் காணப்பட்டன. அவர்கள் ஒரு வனத்தின் வழியாகச் செல்லுகையில், "இது யாருடைய வனம்?” என்று அவள் கேட்டாள். "நேற்றுத் தாடிக்காரர் என்று நீ பெயர் வைத்து அழைத்தாயே அந்த அரசருடையது " என்றான் பிச்சைக்காரன். பல புற்றரைகள், கழனிகள் முதலியவைகளைப்பற்றி அவள் வினவிய பொழுது. "எல்லாம் அதே மன்னனுடையவை; அருகிலே அதோ தெரியும் பெரிய நகரும் அவருடையது " என்று பதில் வந்தது, 'ஆகா, என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன் நான் ! அவர் அழகானவராயும் இருந்தார் ! அவரையே கணவராக வரித்தேனில்லையே!' என்று அவள் தனக்குள்ளே மெல்லச் சொல்லிக்கொண்டாள். கடைசியாக, அவர்கள் ஒரு