பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இறையனார் அகப்பொருள் (களவு தோழிபக்கல் நின்ற குறையுறவினானாய கூட்டம் தலைமகட்கு இல்லை என்றவாறு. அஃதியாங்ஙனமோ 'எனின், “இங்குவந்து ஒழுகாநின்றான் ஒருதோன்றல் உளன், அவன் என்னினாய தோர் குறையுடையான் போலும், அக்குறை இன்றியமையான்; அக்குறை முடித்தருளாயாயின் என்னைக் குற்றேவல் இழத்தி' என, அவ் விழப்பிற்கஞ்சிக் குறைநேர்ந்து, தலைமகள் தலை மகனை ஏற்றுக்கொண்டு கூடுங் கூட்டம் இல்லை, வழக்கினுட் போல என்பது. ' அவ்வியல் பல்லது கூட்டக் கூடல் எவ்விடத் தானுங் களவிற் கில்லை.' (இறையனார் - சி) என அமையாதோ எனின், அதுசொல்லிப் போந்து,

  • உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து கிழவோள் 'தேஎத்துக் குறையுறூ உம் உளவே குறிப்பறி வுறூ உங் காலை யான.'

(இறையனார் - க0) என்றது சொல்லவே, இவ்வகை தோழியாற் குறையுறப் புண ரும் புணர்ச்சி உண்டுகொல்லோ என்று ஐயமாமென்று மேல தனையே வலியுறுத்தற்குச் சூத்திரம் வேண்டிற்று என்பது. இனி, ஒரு சாரார் சொல்லுமாறு : 'குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக் கிழவிக்கில்லை' என அமையாதோ, தலைப் பெயலான என்றது எற்றிற்கோ எனின், தோழியிற் கூட்டந் தான், தலை இடை கடை என, மூன்று வகைப்படும். அவற் றுள் தலைக்கண்ணே அறியநில்லாது இடையாந்தரத்தும் இறுதிக் கண்ணும் எல்லாம் 'இவள் கூட்டவே கூடுகின்றேன்' என்பதனை அறிந்தே கூடும். இங்ஙனம் இல்லாவிடத்து, அருள் புரி கெஞ்சமோ டெஃகு துணையாக வந்தோன் கொடியனும் அல்லன் தந்த நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆனா அரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே.' (அகம் - எஉ) என்னுமாறு உண்டோ என்பது. மற்றும் இப்பெற்றியே வந்தனவெல்லாங் கொள்க. (கங) (பாடம்) 1. தலைப்பெய்தற்கு இலக்கணம். 2. அவளை இழப்ப தற்கஞ்சிக்.