பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



158) இறையனார் அகப்பொருள் (கற்பு இருவர் அரசர் தம்மிற் பொருப என்றவிடத்து அவரைச் சந்து செய்வித்தற்குப் பிரியும் பிரிவு என்றவாறு; வேந்தர்க்கு உற்றுழி என்பது.-- வேந்தர் என்பார் அரசர், அரசர்க்குற்றுழிப் பிரியும் பிரிவு என்றவாறு ; பொருட்பிணி என்பது - பொருட்குப் பிரியும் பிரிவு என்றவாறு; பரத்தை என்பது - புறப்பெண்டிர் மாட்டுப் பிரியும் பிரிவு என்றவாறு; பரம் என்பது புறம், அஃது ஆரியச்சொல், என்று என்பது, எண்ணுதற்கு உரியதோர் வாய்பாடு, ஆங்கு என்பது, அசைச்சொல்; ஆறு என்பது, அவற்றது தொகை, அவ்வயின் என்பது - 'அவ்விடத்து என்ற வாறு; பிரிவு என்பது- நீக்கம் என்றவாறு, ஏ என்பது, ஈற்றசை ஏகாரம். பெயர், சொல்லப்பட்ட பெயர்; முறை, கிடந்த முறை, தொகை, ஆறு எனக்கொள்க. இனி, ஓதற்குப் பிரியும் பிரிவு முன் வைக்கப்பட்டது, தலையான பிரிவாகலானும் உயர்ந்தோர்க்கு உரித்தாகலானும் என்பது. பரத்தையிற்பிரிவு பின் வைக்கப்பட்டது, காமம் பின் வைத்து எண்ணப்படுமாகலான் என்பது. அஃதே யெனின், இவர் முன் பொருவிறந்தார் என்பத னொடு மாறுகொண்டது இச்சூத்திரம்; என்னையோ எனின், தலைமகளை எய்தியிருந்தே இவன் ஓதுவான் பிரிவான் எனின், முன் ஞானமிலனாம் ; இலனாகவே, ஞானத்தின் வழியது ஒழுக் கமாகலானும், ஒழுக்கத்தின் வழித்துத் தலைக்குலமாகலானும் இவையெல்லாங் குறைவுபட்டானாம் என்பது. / இனிக், காவல் என்பது, இவன் நாட்டைப் பிறர் புகுந்து அலைப்பதும் கொள்வதும் செய்ய, அவரை நீக்குதற்கு நீங்குமே எனின், ஆண்மையிற் குறைபட்டானாம் என்பது. 3 இனிப், பகைதணிவினை யென்பது, சந்து செய்வித்தற்குப் பிரியுமேயெனின், தூதுவனாயினானாம்; தூதுவராவார் பிறர்க் குப் பணிசெய்து வாழ்வார் ஆவர் ; அவரது பொருவிறப்பு எனனையோ என்பது. | இனி, வேந்தற்குற்றுழிப் பிரியுமே யெனின், 'கருமஞ் செய்வானாம் ; கருமஞ் செய்வது என்பது, இறப்பவும் இளி வந்ததோர் ஒழுக்கம் ; பிறர்குறிப்பன்றித் தன் குறிப்பு இல்லை யெனப்படும்; ஆகலின், அவரது பொருவிறப்பு என்னையோ என்பது. 1. கற்பினிடத்து. 2. கருமச்சேவகனாம்.