பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-க) இறையனார் அகப்பொருள் 21 தொல்காப்பியனார் 3.பாலைக்கு - நிலம் வேண்டிற்றிலர் ; வேண்டாமையின், தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர், பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர் ; உணா - ஆறலைத்தனவும், ஊரெறிந்தனவும்; மா - வலியழிந்த யானையும், புலியும், செந்நாயும் ; மரம் - இருப்பையும், ஓமையும்; புள் - கழுகும், பருந்தும், புறவும் ; பறை - பூசற்பறையும், ஊரெறிப்பறையும், நிரைகோட் பறையும்; செய்தி - நிரைகோடலும், சாத்தெறிதலும், சூறை பயாடலும் ; பண் - பஞ்சுரம். 'பிறவும்' என்றாதனால், தலைமகன் பெயர் - மீளி, விடலை, காளை ; தலைமகள் பெயர் - எயிற்றி, பேதை; பூ - மராம்பூவும், குராம்பூவும், பாதிரிப்பூவும் ; நீர் - அறுநீர்க்கூவலும், அறுநீர்ச்சுனையும்; ஊர் - கொல்குறும்பு, மக்கள் பெயர் - எயினர், எயிற்றியர், மறவர் மறத்தியர் எனப்படும்; 4. முல்லைக்குத், தெய்வம் - வாசுதேவன் ; உணா - வரகும் சாமையும்; மா - முயலும், சிறுமானும்; மரம் - கொன்றையும், குருந்தும்; புள் - கானங்கோழியும், மயிலும், சிவலும் ; பறை - "ஏறுகோட் பறையும், முரசும் ; (பாடம்) 1. கோட்லும். 2. மன்றுகோட்.