பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



20 இறையனார் அகப்பொருள் (களவு செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், குன் நம் ஆடுதலும், தினைக்கிளி கடிதலும்; யாழ் - குறிஞ்சியாழ். 'பிறவும்' என்றதனால், தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன் ; தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி; நீர் - அருவிநீரும், சுனை நீரும்; ஊர் - சிறுகுடியும், குறிச்சியும் ; பூ - குறிஞ்சியும், காந்தளும், வேங்கையும், சுனைக்குவளையும்; மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும். நெய்தற்குத், தெய்வம் - வருணன்; உணா - மீன் விலைப்பொருளும், உப்புவிலைப்பொருளும் ; மா - சுறாவும், முதலையும்; மரம் - புன்னையும், ஞாழலும், கண்டலும் ; புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும் ; பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும் ; செய்தி-மீன் விற்றலும், உப்புவிற்றலும், அவை படுத்தலும்; யாழ் - விளரியாழ். இனிப் 'பிறவும்' என்றதனால், தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன் ; தலைமகள் பெயர் - நுளைச்சி, பரத்தி; நீர் - மணற்கிணறும், உவர்க்கழியும்; பூ - வெள்ளிதழ்க் கைதையும், நெய்தலும் ; ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும்; மக்கள் பெயர் - பரதர், பரத்தியர், நுளையர், துளைச்சியர் எனப்படும்.