பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



39 சூத்திரம்-2) இறையனார் அகப்பொருள் தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் இயற்கையன்பி னானும் செயற்கையன் பினானும் கடாவப்பட்டுத் தனது நயப்பு உணர்த்தும். இயற்கையன்பு என்பது காரணம் இன்றித் தோன்றும் அன்பு; செயற்கையன்பு என்பது அவள் தன் குணங் களால் தோன்றிய அன்பு. அவ் விரண்டினானும் கடாவப்பட்டு நின்று தலைமகன் சொல்வது நயப்பு என்பது. நயப்பு என்பது தலைமகன் வண்டிற்கு உரைப்பானாய்த் தலை மகள் கேட்பத் தன் நயப்பு உணர்த்தியது எங்ஙனமோ எனின், 'அவள் கையினைச் செங்காந்தள் எனவும், கண்ணினைக் கருங் குவளை எனவும், வாயினை அரக்காம்பல் எனவும் சென்று தடுமா றிக் குழல்மேலும் கோதைமேலும் சுழல்வாய், இவள் செவ்வா யது நறுநாற்றம் அறிதியன்றே! இனி, நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ கொடிப்பூ என்று இப் பல்வேறு வகைப்பட்ட பூவின் மேலுஞ் செல்வாய், ஆம்பற் பூவினது நாற்றம் அறிதியன்றே! அறிவாய், இவ் வகைப்பட்டாள் செவ்வாய்போல நாறுந் தகைமைய உளவே ஆம்பல் நறு மலர்? என்னால் தேறப்படும் வண்டே, உரை யாய்' என உணர்த்தினான் என்பது. அதற்குச் செய்யுள் : 'வேறும் எனநின் றிகல்மலைந் தார்விழி ஞத்துவிண்போ யேறுந் திறங்கண்ட கோன் தென் பொதியி லிரும்பொழில்வாய்த் தேறுந் தகையவண் டேசொல்லு மெல்லியல் செந்துவர்வாய் நாறுந் தகைமைய வேயணி யாம்பல் நறுமலரே.' (ச) என்றது, வேறும் என நின்று இகன் மலைந்தார் விழிஞத்து விண்போய் ஏறுந் திறங்கண்ட கோன் தென்பொதியில் இரும் பொழில்வாய் வண்டா தலால், தேறுந் தகைமைய என்றவாறு. என்றதனாற் போந்த பொருள் : வெல்லுவது கருதி விழிஞத் துக் கடற்கோடியுள் மலைந்த பல்வேந்தரையும் படுவித்து, இவர் என் பகைஞர் என நினையாது, அவர்க்குத் தவத்தானும் தானத் தானும் அன்றிப் புகலாகாச் சுவர்க்கங் கொடுத்த பெருந்தன் மையானது நிலத்து வண்டாதலின் நீயும் பெருந்தன்மையை; ஆகலின், தெளியப்படுதி. அல்லதூஉம், பொதியில் என்பது எல்லாத் தேவர்களுக்கும் பொதுவாகிய இல் என்றவாறு ; அத்தேவர்களுடைய வனம் அவ் விரும்பொழில் என்றவாறு; அப் பொழில்வாழ்வாய் நீயும் அத்தன்மையை அன்றே! ஆகலா னும் தெளியப்படுதி. அன்னாய் நீ பொய் உரையாய்; இவள் வாய்போல நாறும் ஆம்பற்பூ உளவோ என்றவாறு. என்றதனால் தன் நயப்பு உணர்த்தினான். இனி மெல்லியல் என்பது - மென்மையைத் தனக்கு இயல்பாக உடையாள் என்றவாறு ; மென்மை என்பது