பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இறையனார் அகப்பொருள் (களவு ' நண்ணிய போர்மன்னர் வான்புக நட்டாற் றமர்விளைத்த மண்ணிவர் செங்கோல் வரோதயன் வையைநன் னாடனையாய் கண்ணியன் தண்ணந் தழையன் கழலன் கடுஞ்சிலையன் எண்ணிய தியாதுகொல் லோவக லானிவ் இரும்புனமே.' (அக) 'பன்னிய தீந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிவென்ற மன்னிய சீர்மன்னன் கொல்லிரும் வார்புனங் கட்டழித்துத் தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த பொன்னியல் பூண்மங்கை வாடுப் வோமற்றிப் பூந்தழையே.' (க0) ' அரைதரு மேகலை அன்னமன் னாயன் றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோன் உசிதெனொண் பூம்பொதியில் வரை தரு வார்புனங் கையக லான் வந்து மாவினவும் விரைதரு கண்ணியன் யாவன்கோ லோவோர் விருந்தினனே.' () ' பொரும்பார் அரசரைப் பூலந்தை வாட்டிய கோன் பொதியில்(கலான் அரும்பார் தழையுங்கொண் டியான் சொன்ன பொய்யை மெய் யென்ற பெரும்பான் மையுமின்று வாரா விடான்வரிற் பேரமர்க்கட் சுரும்பார் கருங்குழ லாயறி யேனினிச் சொல்லுவதே.' (கஉ) ‘தெம்மாண் பழிந்துசெந் தீமூழ்கச் சேவூர்ச் செருவினன்று வெம்மாப் பணிகொண்ட வேந்தன்தென் னாடன்ன மெல்லியலாய் இம்மாந் தழையன் அலங்கலங் கண்ணியன் யாவன் கொல்லோ கைம்மா வினாய்வந் தகலான் நமது கடிப்புனமே.' ' சிலையுடை வானவன் சேவூர் அழியச் செருவடர்த்த இலையுடை வேல்நெடு மாறன் கழலிறைஞ் சாதவர்போல் நிலையிடு சிந்தைவெக் நோயொடிந் நீள்புனங் கையகலான் முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே.' (கச) 1' இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த் தீர்ந்தண்வாடை கொலைவேல் நெடுங்கண் கொடிச்சி கதுப்புளருங் குன்றாடன் உலைவுடை "வெந்நோ யுழக்குமால் அந்தோ முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே., (கரு) என இவ்வகை கூறக் கேட்டு, ‘நின்னிற்பிரியேன், பிரியின் ஆற்றேன்' என்ற எம்பெருமான்வந்து இவளை இரந்துபின்னின் றமையான் இறந்துபட்டிலன் என ஏமாப்பாளாவது. இனி, வலிதாகச் சொல்லிக் குறைநயப்பிக்குமாறு: 'இங்கு வந்து ஒழுகாநின்றான் ஒருதோன்றல் உளன், அவன் என்னி னாயதொரு குறையுடையான் போலும், ஒருவரான் ஒரு குறை கொள்ளுந் தன்மையனும் அல்லன், தான் பிறர்க்கு ஒரு குறை 1. தொல். களவியல்: உங. (பாடம்) 2. நோயொடுழக்குமா.