பக்கம்:இறைவர் திருமகன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

ஆட்சித் தலைவன் மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறினான்; “யூதர்களின் விருந்துவிழா முடியுங்காலத்தில் யாராவது ஒரு கைதியை விடுவிப்பது நெடுநாள் வழக்கம். இப்போது நான் யாரை விடுதலை செய்ய? ஒரு குற்றமுமற்ற இவரையா? அல்லது கொள்ளைக்காரன் பாரபாசையா?"

எல்லாருக்கும் தீமையே புரிபவனான பாரபாசை விடுதலை செய்யும்படி யாரும் கேட்க மாட்டார்கள்; அதனால் பெருந்தன்மை மிக்க இயேசுநாதரை விடுவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தான் பாண்டியஸ் பைலேட். ஆனால், குருமார்கள் பாரபாசை விடுதலை செய்யும்படி கேட்குமாறு மக்களைத் தூண்டி விட்டார்கள்.

கண்ணை மூடிக் கொண்டு குருமார்கள் கூறியதைப்பின்பற்றிய அக்கூட்டத்தினர், "இந்த மனிதன் வேண்டாம்! பாரபாசையே விடுதலை செய்யுங்கள்; பாரபாசையே விடுதலை செய்யுங்கள்" என்று கூவினார்கள்.

மக்கள் கூட்டத்தின் கண் மூடித்தனமான இந்த வேண்டுகோளைக் கேட்டு பாண்டியஸ்