பக்கம்:இறைவர் திருமகன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அந்த மூன்று அறிஞர்களையும் தன் சபைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான். அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கண்ட நட்சத்திரம் எங்கே எப்போது தோன்றிற்று என்றெல்லாம் விசாரித்தான்.

"அரசே, நாங்கள் நெடுநாளாக இந்த நட்சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனெனில் பழைய வேத நூல்களில் யூதர்களின் அரசன் ஒருவன் பிறப்பான் என்றும், அவன் பிறக்கும் நேரத்தில் சிறந்த நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆண்டுக்கணக்காக வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்த எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்தான் அந்த நடசத்திரம் தோன்றியது. உடனே நாங்கள் அந்த வருங்கால அரசனைக் கண்டு தொழுவதற்காகப் புறப்பட்டு விட்டோம்" என்று கூறினார்கள்.

“பெத்தலெம் நகருக்குச் செல்லுங்கள். அங்கே தான் அந்தக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். நன்றாகத் தேடிப் பாருங்கள். நீங்கள் அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்த பின் திரும்பி வந்து என்னிடம் செய்தியறிவி