18
"பெத்தலெம் நகரில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லோரையும் கொன்று விடுங்கள்” என்பது தான் அந்தத் தீயவனின் கட்டளை. "எனக்குப் போட்டியாக ஓர் அரசன் இந்த மண்ணில் பிறப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று அவன் கறுவினான்.
அன்று இரவு. ஜோசப் ஒரு கனவு கண்டான். அக்கனவில் இறைவன் அவனிடம் கீழ்க்கண்ட சொற்களைக் கூறினார். “எழுந்திரு. உன் பச்சைக் குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு ஓடு. ஹெராடு மன்னன் இந்தக் குழந்தையைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறான். நான் மீண்டும் கூறும் வரை நீ எகிப்து நாட்டிலேயே இரு."
ஆண்டவனின் அறிவிப்பைக் கேட்டதும் ஜோசப் பதறிக் கொண்டு எழுந்திருந்தான். உடனே அவசர அவசரமாகத் தன் கழுதைக்கு சேணம் பூட்டினான். மேரியையும் குழந்தையையும் உட்கார வைத்துக் கழுதையை ஒட்டிக் கொண்டு தென்திசை நோக்கிப் பயண