பக்கம்:இறைவர் திருமகன்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தொலைவில் உள்ள அந்த நாட்டில் அவனுக்குப் பல நண்பர்கள் சேர்ந்தார்கள். அவன் தன் நண்பர்களுடன் கோலாகலமான வாழ்வுநடத்தினான். நாளுக்கொரு கேளிக்கையும் வேளைக்கொரு விருந்துமாக அவன் பணம் செலவழிந்தது. வெகு விரைவில் அவன் கைப்பணம் கரைந்து விட்டது.

காசு இல்லை என்றவுடன் தங்கள் நேசத்தை எல்லாம் நிறுத்திக் கொண்டு நண்பர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்.

தொலைவில் உள்ள ஓர் அன்னிய நாட்டில், பழகியவர்களால் கைவிடப்பட்ட அந்த இளையவன் தன்னந்தனியாய்த் துன்பத்திற்காளாகித் திரிந்தான். கையில் காசில்லாமல், கடன் கொடுப்பார் யாருமில்லாமல் என்ன செய்வதென்று புரியாமல் அவன் மயங்கினான்.

ஒவ்வொரு வீடாகச் சென்று ஏதாவது வேலை கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டு சென்றான். கடைசியில் ஒரு குடியானவன் அவனைப் பன்றி மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அந்த