பக்கம்:இறைவர் திருமகன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. தொழுவத்திலே பிறந்த இளவல்

ரோமாபுரியின் பேரரசர் ஒர் ஆணையிட்டிருந்தார். டேவிட் அரசரின் பரம்பரையினர் அனைவரும், அவர் பிறப்பிடமான பெத்தலெம் நகரில் சென்று பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆணை.

அந்த ஆணையைக் கேட்டு, பெத்தலெம் நகருக்கு வந்து குவிந்த மக்கள் பலர். சுற்றிச் சூழ்ந்திருந்த பல ஊர்களிலிருந்து மனிதர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அரச பரம்பரையில் பிறந்தவர்கள் என்று தங்கள் பெயரை எழுதிக் கொள்ள வந்தவர்களின் கூட்டம் பெத்தலெம் நகர் வீதிகளில் இழைந்து கொண்டிருந்தது.

ஜோசப் ஒரு தச்சு வேலைக்காரன். ஆனல் அவனும் அரச வம்சத்தின் வழி வந்தவன்.