பக்கம்:இலக்கண வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

இதனை, “கொண்டு தலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது” என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு செய்கிறார் (பொ. 17.)

“இளமை தீர் திறம்” என ஆசிரியர் கூறினாராயிலும் அதனை, “இளமை தீர் திறமாவது, இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என” என்கிறார். “எண்ணி உரைகாரர் ஈவார்” என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ. 54). “கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தல்” என்பதன் விளக்கமும் காண்க. (பொ .87)

‘ஏறிய மடற்றிறம்’ முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ‘ஏறா மடற்றிறம்’ முதலாக எதிர்மறையாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ . 55.)

“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்பதற்கு, “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்” எனப் பொருள் வரைந்து, இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழு துணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க” என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருளே பொருளெனப் பன்னிரு படலச் சான்று காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/129&oldid=1471489" இலிருந்து மீள்விக்கப்பட்டது