பக்கம்:இலக்கண வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

பயின்றது போலும்" என்கிறார். இத்தகைய குறிப்புகள் மொழி வரலாற்றுக்கு வாய்க்கும் அரிய கருவிகளாம்.

சில சிறப்புப் பெயர்கள், சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைச் சுட்டுவதால் பல்வேறு வரலாற்றுத் துணைகளை வழங்குதல் உரை வல்லார் மரபு. அம்மரபில் தக்க பங்கு பற்றிக் கொள்கிறார் சேனாவரையர்.

அகத்தியனாரால் தமிழுரைக்கப்பட்டது (73) உரையூர்க்கண் நின்ற சிராப்பள்ளிக்குன்று (82) சீத்தலைச் சாத்தன் (174) தெய்வப் புலவன் திருவள்ளுவன் (41) பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் (165) பரணரது பாட்டியல் (80) பெருந்தலைச் சாத்தனார் (26) பெருந்தோட் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி (26) முடத் தாமக் கண்ணியார் (270) இன்னவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

‘பெண்’ என்னும் சொல் ‘பெண்டு’ என்றும் வழங்கும். ‘பெண்டாட்டி’ என்றும் வழங்கும். இவ்வழக்கு சேனாவரையரால் பெரிதும் ஆளப்படுகின்றது (24, 25, 161, 163).

பொத்தகம் என்பது பழவடிவம். அதனைப் ‘புத்தகம்’ என்பது பின்வழக்கு. சாத்தன் புத்தகம், சாத்தனது புத்தகம் என வழங்குகிறார் சேனாவரையர் (413).

நாடகம் அல்லது கலை நிகழ்ச்சி நடத்தும் அரங்கு ‘ஆடரங்கு’ என வழங்குதலும், செயற்கை மலை உருவாக்கி வைத்தலும் (செய்குன்று) சுட்டுகிறார் (415).

நிலத்தை ஒற்றி வைக்கும் உறுதியோலை ‘ஒற்றிக்கலம்’ எனவும், விலைக்கு விற்று எழுதிய எழுத்தை ‘விலைத் தீட்டு’ எனவும் வழங்கும் வழக்கைக் குறிக்கிறார் (80).

இ.வ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/142&oldid=1471501" இலிருந்து மீள்விக்கப்பட்டது