பக்கம்:இலக்கண வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

151

கெட்டு 'அன்' விகுதி புணர்ந்து தொல்காப்பியனென நின்று பின்னர்த் தொல்காப்பியனாற் செய்யப்பட்ட நூலென்னும் பொருட்கண் அன் விகுதி கெட்டு அம் விகுதி புணர்ந்து தொல்காப்பியம் என முடிந்தது” என்கிறார்.

“எழுத்தெனப்படும்" எனத்தொடங்கும் தொல்காப்பிய முதல் நூற்பாவை ஆயும் இவர் முதற்கண் நூன் மரபு என்பதைக் கூறுகிறார். “எழுத்து குறில் நெடில் உயிர் மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற் பொருட்டு முதனூல் ஆசிரியனாற் செய்து கொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின” என்கிறார்.

அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதும் எழுத்தெனப் படும் என்ப என்று ஓதுதல் வேண்டும். அவ்வாறு ஓதாது, எழுத்தெனப்படும் என்றது அது மங்கல மொழியா தலால் என்கிறார்.

நூற்பாவுக்கு உரைவிளக்கம் கூறுவதுடன் சொல் சொல்லாக எடுத்துக்கொண்டு மிகப்பெரும் விரிவுரை நிகழ்த்துகிறார். நூன் முழுமைக்கும் உரை எழுதும் நோக்கினர் அல்லர் இவர் என்பதை அதன் விரிவே காட்டு கின்றது. ஒரு நூலை எவ்வாறு ஆராயவேண்டும் என்பதற்கு ஒரு வகையான் வழிகாட்டியாக அமைவது இந்நூல் எனலாம்.

ஐ. தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிர விருத்தி

இப்பெயரிய நூல் 1905 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் நிறைவில் “சோழவந்தானூர் அரசஞ்சண்முகன் உரைத்த சிறப்புப் பாயிர விருத்தி முடிந்தது” என்றும் குறிப்புளது. வடவேங்கடம் தென்குமரி எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரத்திற்கு மட்டும் 246 பக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/196&oldid=1471581" இலிருந்து மீள்விக்கப்பட்டது