பக்கம்:இலக்கண வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றுக்களும் ஒரே சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இவற்றை அவ்வவ் விடத்தின்கண் பகுத்துணர்தல் அவ்வளவு எளிதாக இல்லை. எனவே அக்கூற்றுச் சூத்திரங்களை அவ்வவ் வியல்களில் ஓரிடத்தில் எழுதி அந்தந்த இடங்கட்குரிய கூற்றுக்களை அங்கங்கே எடுத்தெழுதி உரை எழுதப்பட்டுள்ளது.

அகத்திணையியல் 41-ஆம் சூத்திரத்தில் உள்ள தலைவன் கூற்றுக்கள் 17-இல், 6 களவின் உடன் போக்கிற்கும், அடுத்த 11-உம் கற்பின் பிரிவுக்கும் உரியவையாகும். எனவே அச்சூத்திரத்தை இரண்டாக்கி அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே ஒரு சூத்திரம் மிக்கது.

இப்புதிய உரைக்கேற்ற வைப்பு முறைப்படி இயல்களும் அவற்றின் நூற்பாத் தொகையும் வருமாறு:

முதற் பகுதி

அடுத்த இயல்கள்

1. அகத்திணையியல் 45

1. உவம இயல் 46

2. பொதுவியல் 73

2. செய்யுளியல் 221

3. களவியல் 71

3. மரபியல் 101

4. கற்பியல் 46

——

5. மெய்ப் பாட்டியல் 27

368

6. புறத்திணையியல் 36

——

——
298

——

ஆக 666

—இவை உரை ஆசிரியர் கூறியவை.

தமிழ் மக்கள் யாவரும் எளிதில் பொருளுணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் நன்னோக்கில் புத்துரை வரையத் தொடங்கியமை பாராட்டுக்கு உரியதாகும். ஆனால், அப்புத்துரைக்காக நூலாசிரியர் செய்து வைத்த அடைவு முறையை, உரைகாண்பார் எத்தகு செவ்விய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/204&oldid=1471611" இலிருந்து மீள்விக்கப்பட்டது