பக்கம்:இலக்கண வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தொல்காப்பிய உரைவள நூல்கள் ஒவ்வொன்றாய் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வுரை வளப் பதிப்பின் முன்னோடி ஆபிரகாம் அருளப்பன், வி. ஐ. சுப்பிரமணியர் ஆகிய இருவரும் இணைந்து செய்த தொல்காப்பியச் சொல்லதிகார உரைக் கோவையாகும். இவ்வாறு பல்வேறு பதிப்புகள் வெளிப்படுதலால் தொல்காப்பிய ஆய்வு பெருகிற்று. ஆய்வாளர்கள் தம் ஆய்வுகனைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிப்படுத்தினர். இவ்வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை தொடர்ந்து நடத்தி வரும் இலக்கணக் கருத்தரங்குகளும், அக்கருத்தரங்க வெளியீடுகளும் குறிப்பிடத் தக்கவையாகும்.

அறிஞர் மு. இராகவ ஐயங்கார், “தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி”' என்றொரு நூலை 1912-இல் எழுதினார். இது கொழும்பு சீந்தன் தோற்றுவித்த ஒரு போட்டியில் முதற்பரிசு பெற்ற நூலாகும். இந்நூலையன்றி ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்னும் பெயரிய நூலிலும் தொல்காப்பியம் தொடர்பான சில கட்டுரைகள் வரைத்துள்ளார். இப்பொருளதிகார ஆய்வில் தலைப்பட்டு நூலெழுதிய மற்றொருவர் முத்துசாமி ஐயர் எம். ஏ., எல்.டி., என்பார். அவர் பள்ளிக்கூட ஆய்வாளராகப் பணி செய்தவர் எனினும் தமிழாய்விலும் தலைப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

‘பழந்தமிழர் வாழ்க்கை அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து’ என்னும் நூல் கா. சுப்பிரமணிய பிள்ளையால் எழுதப்பட்டது. தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை இளவழகனார் புத்தாய்வுரை கண்டன. ‘தமிழர் இன்பியல் வாழ்க்கை’, ‘பொருளியல் வாழ்க்கை’ என விளக்க நூல்களும் பின்னர் வெளி வந்தன.

தமிழ் வரலாறு — முதல் தொகுதி — இரா. இராகவ ஐயங்காரால் எழுதப்பட்டது. அதில் தொல்காப்பியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/207&oldid=1472487" இலிருந்து மீள்விக்கப்பட்டது