பக்கம்:இலக்கண வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200



“ஆன்ற சிறப்பின் அறம்பொருள் இன்பமென
மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள்
அறனும் இன்பமும் அகலா தாகிப்
புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே”

என்னும் நூற்பாவைக் காட்டி, அது மயங்குமாற்றையும் குறிக்கிறது தொல். புறத்திணையியலுரை.

இவர் கூறிய கணிவன் முல்லை இலக்கணம் தொல். புறத்திணை நச்சினார்க்கினியர் உரையால் அறிய வருகின்றது. இதனை, “சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலே சிலர் புதுவகையால் சில சூத்திரங்களைச் செய்து அவற்றைத் தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பெயரால் பன்னிருபடலம் என்று பெயரிட்டு அமைத்துக் கொண்ட நூல்” என்கிறது ‘மறைந்த தமிழ் நூல்கள்’ (314), என்னும் நூல்.

ஏ. மயேச்சுரர் யாப்பு

யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் போற்றப்படும் ஒருவர் மயேச்சுரர். இவர்க்குப் பேராசிரியர் என்னும் பெயரும் உண்டு என்பது விளங்குகின்றது. அன்றியும் இவரை நல்லாசிரியர் (82, 87) என்றும், தொன்னூற் கவிஞர் (83) என்றும் கூறுகிறார்.

அடை நலம்

மயேச்சுரர் என்னும் பெயரமைந்த பேராசியரை, "பிறை நெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (பக். 53, 133), நீர்மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (117, 263, 268), வாம மேகலை மாதை யோர்பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர் (136), உயரும் புரம் நகாச்செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (169), திரிபுர மெரித்த விரிசடை நிருத்தர் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (221), பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (293), காம வேளைக்கறுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/245&oldid=1473223" இலிருந்து மீள்விக்கப்பட்டது