பக்கம்:இலக்கண வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212


என்கிறது. இதனால் அகப்பொருளும், புறப்பொருளும், அவ்விரு பொருளிலும் மிகுத்துத் தோன்றியதாம் அகப்புறப்பொருளும் என்னும் மூன்று பொருட் கூறுகளும் இப்பொருளியலில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டுமென உறுதி செய்யலாம். ஆனால், அகப்பொருட் களவினை முதற்கண் கூறும் 21 நூற்பாக்கள் முற்றாகக் கிடைத்துள்ளன. கற்பில் அறத்தொடு நிலை, உடன் செலவு, சேயிடைப்பிரிவு ஆயிடைப்பிரிவு என்றவை உள. இறுதி நூற்பாவுக்குரிய மேற்கோள் விளக்கம் ஒரு பாதியளவுடன் நின்றுவிட்டது.

அகத்திணைக்கு இன்றியமையாத முதல் கரு உரிப்பொருள்களை முதல் 13 நூற்பாக்களில் கூறுகிறார். பின்னர்க் களவு பற்றிக் கூறும் இவர், களவு கந்தருவத்துடன் ஒப்பது என்று கூறி இயற்கைப்புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டம் — பகற்குறி, தோழியற் கூட்டம் — இரவுக்குறி, வரைவுகடாதல், உடன்போக்கு வலித்தல் என்னும் ஆறு பகுப்பில் கூறுகிறார். இவ்வாறு பகுப்புள்ளும் சுட்டப்படும் துறைகள் 81.

கற்பு என்றும் பிரிவில் அமைந்துள்ள நான்கு பகுப்பிலும் இவர் சுட்டும் துறைகள் 54. ஆக 135 துறை விளக்கங்கள் இந்நூலால் அறிய வருகின்றன.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் முறை வைப்பை இவர் ஆள்கிறார். குறிஞ்சியைக் 'குறுஞ்சி' என்றும், மகிழணனை 'மகுணன்' என்றும் கந்தருவத்தைக் 'கந்திருவம்' என்றும் (3, 8, 14). ஆள்கிறார்.

பிரிவுகளைச் சேயிடைப் பிரிவு, ஆயிடைப்பிரிவு என இரண்டாக்கிக் கூறுதல் தனிப்பகுப்பு முறையாகும். சேயிடைப் பிரிவு, அயலிடப்பிரிவு; ஆயிடைப்பிரிவு, அவ்விடத்துப்பிரிவு. ஓதல், பொருள், தூது, துணை, பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/257&oldid=1473296" இலிருந்து மீள்விக்கப்பட்டது