பக்கம்:இலக்கண வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

பற்றிய பாடல்களுள் ஒன்றும் விருத்தியுரை காரிகையுரை ஆகியவற்றில் இடம் பெறவில்லை. ஆதலால் இவ்வேந்தன் காலத்திற்கு முற்படவே இவ்வுரைகள் தோன்றிவிட்டன எனலாம்.

யாப்புக் களஞ்சியம்

யாப்பிலக் கணத்திற்கென ஒரு கலைக்களஞ்சியம் உண்டென்றால் அது யாப்பருங்கல விருத்தியுரையே என்பதில் இருகருத்துக்கு இடமில்லை. இவ்வுரை வளமே ஆயிரக்கணக்கான மேற்கோள் நூற்பாக்களைத் திரட்டி ‘மேற்கோள் விளக்க நூற்பா அகர வரிசை’ என்றொரு நூலை யான் உருவாக்க உந்தியதாகும். தமிழ் யாப்பிலக்கணப் பரப்பைக் கடலெனப் பரப்பியும் மலையென உயர்த்தியும் காட்டவல்ல வுரை இவ்விருத்தியே.

யாப்பருங்கல விருத்தி ஆராய்ச்சி முன்னுரை நிறைவில் கூறியவாறு, “விருத்தியுரைகாரர் பல்கலைக் குரிசில்; பேரறிஞர்; நயத்தக்க உரையாளர்; சீரிய நினைவாளர்; நாடு கண்டவர்; வரலாற்றுத் தெளிவாளர்; பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர்; இன்ன பல நலங்களெல்லாம் துன்னிய செல்வர்” என்க.

மேற்கோள் நூற்பெயர்கள்

உரையில் காட்டியுள்ள மேற்கோள் நூல்கள் ஒன்றா இரண்டா? அகத்தியம், அகநானூறு, அஞ்சனம், அடிநூல், அணி நூல், அமிர்தபதி, அவிநயம், அறிவுடைநம்பி சிந்தம், ஆதிநாதர் நூல், இடைக்காடர் ஊசிமுறி, இரணமாமஞ்சடை, இராமாயணம், இறையனார் களவியல், இன்மணியாரம், இன்னிலை, உதயணன் கதை, எழுகூற்றிருக்கை, ஐங்குறுநூறு, ஔவையார் பாடல், கடியநன்னியார் கைக்கிளைச் சூத்திரம், கண்ணனார்கவி, கணக்கியல், கபிலர் பாடல், கருடநூல், கருநாடகச் சந்தம் (குணகாங்கியம்), கலித்தொகை, கலியாணகதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/269&oldid=1473343" இலிருந்து மீள்விக்கப்பட்டது