பக்கம்:இலக்கண வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

263

இவ்வுரையாசிரியர், “முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ” என்னும் திருநூற்றந்தாதிப் பாடலைக் காட்டி அவிரோதி ஆழ்வார் பெயரையும் குறிக்கிறார் (79). ஆதலால் 14 ஆம் நூற்றாண்டவராம் அவரைக் குறித்தலால் இவர் அவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது விளங்கும்.

தொல்காப்பியத்திற்குப் பின்னர் எழுத்து சொல் இலக்கணச் சுருக்கப்பயிற்சிக்கு இந்நூலே கருவியாக விளங்கியதென்றும், பின்னர் இதனின் விரிந்த ‘நன்னூல்’ இதனிடத்தைப் பற்றிக்கொண்டதென்றும் கொள்ளலாம்.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு, கழகத்தின் வழியே 1945 இல் வெளிவந்தது. பதிப்பாசிரியர் கா. உ. கோவிந்தராச முதலியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/308&oldid=1474231" இலிருந்து மீள்விக்கப்பட்டது