பக்கம்:இலக்கண வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

என்பதும், இவரைப் புரந்த சீயகங்கன் சமண சமயத்தவன் என்பதும் கருதத்தக்கன.

காலம்

பவணந்தியார் காலம் சீயகங்கன் காலம் என அறியப்படுதலால் அவன் காலத்தை அறிதல்வேண்டும். முதற் குலோத்துங்கன் (1070 - 1120) இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150) மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆகிய மூவர் காலத்திலும், சீயகங்கன் என்னும் பெயருடையார் அவர்களின் கீழிருந்து கங்க நாட்டை ஆட்சி செய்தமை கல்வெட்டுகளின் வழியே அறிய வருகின்றன. எனினும் நன்னூல் பாயிரத்தின் வழியே அறியவரும் அமராபரண சீயகங்கன் என்பான் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே இருந்தமை கல்வெட்டால் அறியப்படுகின்றது (S.I.I. Vol vi. 823). அவன் “குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோத்பவன் சீயகங்கன் அமராபரணன்” என்று குறிக்கப்படுகின்றான். இவன் மனைவி அரியபிள்ளை என்பவளும், இவன் மகளும் அறப்பணி செய்த குறிப்புகளும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள. (M. E. R. No. 446 of 1912; Ibid 195 of 1892.)

சீயகங்கன் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவன் என அறியப்படுவதாலும் அவன் கல்வெட்டுகள் கி.பி. 1212 முதல் கிடைப்பதாலும் பவணந்தியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியது ஆகும்.

நன்னூலாரையும் நன்னூலையும்,

“முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள்
நன்னூ லார்தமக் கெந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக”

என்று சாமிநாததேசிகரும் (இலக்கணக் கொத்து, 8 உரை.),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/327&oldid=1475352" இலிருந்து மீள்விக்கப்பட்டது