பக்கம்:இலக்கண வரலாறு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313


சுருங்கிய வகையிலும் நூல் இயற்றியவர். இவ்வுரை குறித்து உரையாசிரியர் கூறுவது (பதிப்பு. 1896):

உரையமைதி

“சங்கர நமச்சிவாயப் புலவராற் செய்யப்பட்டுச் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட விருத்தியுரையும், விசாகப் பெருமாளையர் செய்த காண்டிகையுரையும் இராமாநுசக் கவிராயர் இயற்றிய காண்டிகை விருத்தி யுரையும் முதலிய உரைகளே இக்காலத்து விசேஷமாய் வழங்கி வருகின்றன.

“யாம் இப்பொழுது அவ்வுரைகள் எல்லாவற்றுள்ளும் பரிக்ஷைக்குப் படிக்கும் மாணாக்கர்களுக்குப் பெரிதும் பயன்படாத பல விஷயங்களை நீக்கியும் மற்றையவற்றை நன்கு விளக்கியும், இன்றியமையாத பல விஷயங்களைப் புதிதாகச் சேர்த்தும் தெளிவாகப் பொருள் விளங்குமாறு மிக எளிய நடையில் எமது சிற்றறிவுக்கு இயன்றவளவு ஒரு காண்டிகையுரை எழுதி உதாரணங்களை ஒழுங்குபடுத்தி அவசியமான வினாக்களையும் இறுதியிற் கூட்டிப் பதிப்பித்திருக்கிறோம்”.

இப்பகுதியில் இவ்வுரை நூல் அமைதி தெளிவாம்.

ஈதொன்று

ஒரு புதிய செய்தி நன்னூலாசிரியர் பவணந்தியாரைப் பற்றி எவ்வுரைகாரரும் கூறாத செய்தி: “பவணந்தி முனிவர் பிராமண வருணத்தில் தோன்றினார்” என்று இவர் கூறுவது நூலாராக இருந்தால்தான் நூலாசிரியராக இருக்க முடியும் என்னும் முடிவில் எழுதியது போலும்.

சே. கிருட்டிணமாச்சாரியாரும் இவ்வுரைக்கு இணையாசிரியர் என்பது அறிய வருகின்றது.

ஒ. நன்னூல் பிறபதிப்புகள்

நன்னூலுக்கு இங்குக் குறிக்கப்பட்ட உரைப்பதிப்புகளையன்றி வேறு சில பதிப்புகளும் கடந்த நூற்றாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/358&oldid=1474296" இலிருந்து மீள்விக்கப்பட்டது