பக்கம்:இலக்கண வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314


முதலே வெளிவந்துள்ளன. வேதகிரி முதலியார் உரை, பவானந்தம் பிள்ளை யுரை ஆகியவை எளிமையும் தெளிவும் உடைய உரைகள். மாணவர் பயிற்சிக்கென அமைந்தவை. இராசகோபாலப்பிள்ளை என்பவராலும் ஒரு காண்டிகையுரை வெளியிடப்பட்டுள்ளது (1880). நன்னூல் இலகுபோதம் ஆ முத்துத்தம்பிப்பிள்ளை வெளியிட்டது. (1905). சோயசு என்பாரும் சாமுவேல்பிள்ளையும் எழுதிய நன்னூல் ஆங்கில விளக்கத்துடன் 1848 இல் முதற்பதிப்பும் 1851இல் மறுபதிப்பும் வந்துள்ளது. ஆங்கில விளக்கத்துடன் நன்னூற் பதிப்பு ஒன்று 1858 இல் போப்பையரால் வெளியிடப்பட்டுள்ளது. நன்னூல் ஆங்கில மொழி பெயர்ப்பு இலாசரசு துரையால் வெளியிடப்பட்டுள்ளது (1878). அதன் மறுபதிப்பும் (1884) வந்துள்ளது.

இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, என்னும் பெயரால் பல நூல்கள் கடந்த நூற்றாண்டிலும், இந்நூற்றாண்டிலும் வெளிவந்துள.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இரண்டையும் ஒப்பிட்ட நூல்களும் வெளிவந்துள்ளன. இக்காலத்துக் கல்லூரிப் பயிற்சிக்கெனவும், புலவர் தேர்வுக்கெனவும் சுருக்க நூல்களும் வினாவிடை நூல்களும் எண்ணற்று வெளிவந்துள்ளன.

பாயிரம்—Preface

சிறப்புப் பாயிரம்—Special Preface

நூல் செய்தவர் பெயர் முதலியன – The name of the Author, etc.,

பொதுப்பாயிரம் — General Preface

நூலின் வரலாறு—Nature of a Classical work.

இவ்வாறு தலைப்புகள் மட்டும் தமிழும் ஆங்கிலமுமாக வரும் சில பதிப்புகளும் வெளிவந்துள்ளன. இவற்றை வரன்முறையே நோக்குவார் ‘Notes’ எனப்படும் உரை நூல் வளர்ந்த வரலாற்றைத் தனி ஆய்வாகச் செய்ய உதவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/359&oldid=1474297" இலிருந்து மீள்விக்கப்பட்டது