பக்கம்:இலக்கண வரலாறு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321

கருதுக. உரைப் போக்கை நோக்க, “கிழவோன் கூற்றும்” என்பதிலுள்ள (225) “என்றார்.” ஏடு பெயர்த்தோர் கருத்தாகலாம்.

சொல் - பொருள்

“உரன் எனினும் அறிவெனிலும் ஒக்கும். பெருமை யென்பது பழியும் பாவமும் அஞ்சுதல். அறிவென்பது தக்கதறிதல்; அச்சமென்பது காணாத தொன்று கண்டால் பெண்டிரிடத்து நிகழ்வது. நாணம் என்பது பெண்டிர்க்கு இயல்பாகிய குணம். மடம் என்பது பேதைமை எனக் கொள்க” இவ்வாறு சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறும் இடங்கள் அரிதாக உரையில் உள்ளன (35).

சில விளக்கம்

இயற்பெயர் குரவராதியரா தியராற் பெற்ற பெயர் என்கிறார் (247). கோவலன் என்பது கோபாலன் என்னும் வடமொழித் திரிபாய் ஆபுரத்தற்றொழின்மேல் நின்றது (247) என்கிறார்.

நற்றாய் கூற்று நூலின் இல்லாமையைக் குறிப்பிடும் இவர், “நற்றாய் குறிப்பின் அன்றி அறத்தொடு நிற்கப் பெறாள் என்றமையால் செய்யுளில்லை” என்கிறார் (178).

நூற்பா இன்ன நுதலிற்று என்று கூறிப் பொழிப்புப் பொருள் எழுதி எடுத்துக்காட்டு விளக்கங்களை ஏற்ற அளவான் கொண்டு செல்கிறது உரை. கடின நடை, உரை மிடுக்கு, செறிவு, விரிப்பு ஆகியன இல்லாமல் சிற்றாற்றுச் செலவென உரை செல்கின்றது.

பதிப்பு

‘இலக்கண பஞ்சகம்’ என்னும் தொகுப்பில் நம்பியகப் பொருள் மூலம் இடம் பெற்று வெளிவந்தது. இ. வ-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/366&oldid=1474304" இலிருந்து மீள்விக்கப்பட்டது