பக்கம்:இலக்கண வரலாறு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333


வழி

இத்திரகாளிய வழிப்பாட்டியல் எனவும், ‘அகத்தியர் வழிப்பாட்டியல்’ எனவும் இருவகை வழிகளில் பாட்டியல்கள் எழுந்துள்ளன என அறிந்தோம். இப்பாட்டியல் அகத்தியர் பாட்டியல் வழிப்பட்டது எனப்படுகின்றது.

“அகத்திய மாமுனி யாக்கிய பாட்டியல் ஆன பௌவம்” (சி. பா. 2).

“குறுமுனி யாதிகலைஞர் கண்ட, பாட்டியலானவை எல்லாம் தொகுத்து” (சி. பா. 3). என்று சிறப்பாயிரம் கூறுவது காண்க.

மறை-இலக்கணம்

யாழ் முதலிய இசைக்கலை ‘நரம்பின்மறை’ எனப் பாடுதல் பழவழக்கு. இந் நவநீத நடனாரை “நாட்டிய வேதத்தவன் நவநீதநடன்” என்கிறது சிறப்புப் பாயிரம் (3). இதனால் சங்கச் சான்றோர் ‘மதுரை இளம்பாலாசிரியர் சேந்தங் கூந்தனார்’ போல இவரும் கூத்துக்கலையில் வல்லார் எனக் கொள்ளலாம். நாட்டிய வேதத்தவன் என்றிருந்தும், ‘வேதத்தவன்’ என்பதால் மறையோர் இவர் என்றும் கூறினர்.

இப்பாட்டியல் நூல் சில காரிகைகளில் மகடூஉ முன்னிலையுடையது. காரிகை யாப்பால் வரும் பல நூல்கள் இம்முன்னிலை கொள்ளல் எண்ணத்தக்கது.

நூலளவு

பொருத்தவியல், செய்யுள் மொழியியல், பொது மொழியியல் என மூன்றியல்களையுடையது இந்நூல். இவ்வியல்களில் முறையே 25, 43, 37 ஆக 105 பாடல்கள் உள்ளன. சிறப்புப்பாயிரம் 3 பாடல்கள்; ஆக 108. இவற்றுட் சில செய்யுட்கள் இடைச்செருகலாக இருக்கலாம் என இந்நூலைப் பதிப்பித்த உ. வே. சாமிநாதையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/378&oldid=1474324" இலிருந்து மீள்விக்கப்பட்டது