பக்கம்:இலக்கண வரலாறு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


22. வரையறுத்த பாட்டியல்



பெயர்

‘வரையறுத்த பாட்டியல்,’ பத்தே பத்துக் கட்டளைக் கலித்துறைகளால் அமைந்தது. அதிலும் மூன்று பாடல்கள் வாழ்த்து அவையடக்கம் வருபொருள் பற்றியன. எஞ்சிய ஏழு பாட்டுகள் மங்கலச் சொல் என்னும் ஒரோ ஒரு பொருள் பற்றியனவே. ஆதலால் இவ்வரையறை கருதி வரையறுத்த பாட்டியல் எனப்பட்ட தெனலாம். இனி, இவ்விவ்வெழுத்து முதலாகவுடைய பெயர்களுக்கு இதுவே மங்கலச் சொல் என வரையறுத்தலாலும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.


இப்பாட்டியலுக்குச் சம்பந்தப் பாட்டியல் என்பதொரு பெயருமுண்டு. அது கொண்டு சம்பந்த மாமுனிவர் என்பார் பாடியமையால் இப்பெயர் பெற்றது எனக் கருதினாரும் உளர். ஆனால்,


"சம்பந்த மாமுனி பாதமலர், நேர்கொண் டிறைஞ்சி நிகழ்த்துகின்றேன்" என நூலின் முதற்பா கூறுதலால் அம்முனிவர் இந்நூலாசிரியர்க்குக் குருவராக இருக்கலாம். அவர் பெயரைத் தாம் இயற்றிய நூலுக்குச் சூட்டினார் எனலாம். இவ்வகைக்கு நேமிநாதம் எடுத்துக் காட்டாதல் அறிக.

பொருள்

இந்நூல் ‘நெடுநூல் சுருக்கி வரையப்பட்டதென்றும்’ ‘மாமதி (பேரறிவு) இல்லார்க்குத் தெரிவுறக் கூறப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/381&oldid=1475353" இலிருந்து மீள்விக்கப்பட்டது