பக்கம்:இலக்கண வரலாறு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353


என்பது திருப்பதிக் கோவை எடுத்துக் காட்டுப்பாட்டு. மேலும் ஒரு பாடலும் இத்துறைக்குளது.

“வானவரம்பன் சேரன்; அவன் கொடி வில்; அவ்வில்லிடம் வானம்; ஆதலால் தெய்வ மகளோ”

“பொன்னி வரம்பன், சோழன்; அவன் கொடிபுலி; அப்புலி வாழிடம், மலை; ஆதலால் மலைமகளோ”

“மீனவர் அம்பொற்கொடி மீன்; அதன் வாழிடம் கடல்; ஆதலால் திருமகளோ”

“பரல்பரந்த சுரந்தணிவித்தல்”

என்னும் துறைக்கு (86) எடுத்துக்காட்டு:

“கான்மல்கு கோதைக்கு வண்குரு கூரனன் காவணமாம்
வான்மல்கு பொங்கர்த் திருப்புளி நீழலின் வாழியரோ
வேன்மல்கு வைந்நுதி வெண்பரல் யாவும்
வியன்பொருநைத்
தேன்மல்கு மல்லிகை மென்முகை ஆகுக சீறடிக்கே”

சுரத்துச் சென்ற மகளுக்குக் கூரிய பரல்கள், அப்பொழுது மலர்வுள்ள மல்லிகை முகையாக இருக்கவேண்டுமாம்! பரிவால் உருகிப் பழிச்சுவது இது. இக்கோவைக்கும், நூற்பாவுக்கும் மூலமே உண்டு உரைவிளக்கம் இல்லை. இதன் முதற்பதிப்பு 1932 இல் தமிழ்ச் சங்க வழியாக வெளிவந்தது. பதிப்பாசிரியர் கி. இராமாநுசையங்கார்.

இ.வ. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/398&oldid=1474407" இலிருந்து மீள்விக்கப்பட்டது