பக்கம்:இலக்கண வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xl

இலக்கணம் கற்பாரால் முற்பட அறியப்பட வேண்டியது, அது வளர்ந்த வரலாறு' எனக் கருதியமையால், முகப்பு'ரையிலேயே அதனைச் சுருங்க உரைத்துள்ளேன் எனச்சுட்டி அமைகின்றேன். நூன் மதிப்பீட்டாளர், இத்தகு “நூனிறை காட்டி நுணங்கரில் உணர்த்தும் மரபு மேற்கொண்டால் மொழிநலம் சிறக்குமென மொழிந்து நன்றி கூறுகின்றேன். 'இலக்கண வரலாறு' என்னும் பெயரிய நூலில் அதன் கோட்பாடுகள், ஆய்வுகள் அனைத்தும் இடம் பெறச் செய்வதாயின்”... என்பதும் எண்ணத் தோன்றுகின்றது!

இவ்விலக்கண வரலாற்றை எழுதத் தூண்டியவர் பேரா. மெய்யப்பனார். அவர்தம் ஆர்வம் பெரிது. அவ்வார்வம் போலவே அன்பும் நண்பும் பெரிது. அவற்றைப் போலவே எறும்பும் சுரும்பும் தோற்கும் சுறுசுறுப்பும் பெரிது. இன்னவெல்லாம் வாழ்வியலுக்கு வளக் கொடைகள்.

இக்கொடைகளைப் பெற்ற ஒருவர் தமிழ்கூறு நல்லுலகக் கொடையாக இந்நூலை வழங்குகின்றார். இக் கொடைக்கு எளியேன் ஒரு பொருளாக இருந்தமை, அன்னைத் தமிழின் கொடையே என்பதை நினைத்து உருகுவதல்லால் ஒன்றறியேன். அவர் வாழி! அவர்தம் அருந்தமிழ்த் தொண்டு வாழி!

தமிழ்ச் செல்வம்,
பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,
திருநகர், மதுரை-6.

தமிழ்த் தொண்டன்,
இரா. இளங்குமரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/41&oldid=1471342" இலிருந்து மீள்விக்கப்பட்டது