பக்கம்:இலக்கண வரலாறு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367

அவர்தம் மக்களுக்குக் கற்பிக்கும் கடனை மேற்கொண்டார். இம் மேற்கோளின் பயனாகத் தொல்காப்பியத்திற்கு நன்னூல் முரணும் இடங்கள் புலப்பட்டன. அவற்றைத் தக்கவாறு திருந்திக் கொண்டார். மயிலைநாதர் உரையிலும் முரண்பட்டதென அறிந்த இடங்களைத் திருத்திக் கொண்டார். எழுத்து சொல் இலக்கணங்ளைத் தாம் கருதுமாறு அமைத்துக் கொண்டபின் பொருளிலக்கணத்தையும் இணைத்தார். தாமே நூலுக்கு உரையும் வரைந்தார்.

நூல்கள்

மயிலமலை முருகன் மேல் மயிலம் பிள்ளைத்தமிழும், சிவஞான பாலய சுவாமிகள் மேல் பாசவதைப் பரணியும் இயற்றினார். மேலும் திருவாரூர்ப் பன்மணிமாலை, நல்லூர்ப் புராணம், திருவாட்போக்கிப் புராணம், கமலாலய அம்மை பிள்ளைத்தமிழ் என்பனவும் பாடினார். இவர்தம் பெருமை,

“ஐம்பதின்மர் சங்கத்தார் ஆகிவிடா ரோநாற்பத்
தொன்பதின்மர் என்றே உரைப்பரோ—இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி
தன்மீதந் நாள்சரித்தக் கால்”

என்னும் அந்தகக்கவி வீரராகவர் வெண்பாவால் விளங்கும்.

மக்கள்

சதாசிவம் தியாகராசன் சிதம்பரநாதன் வடுகநாதன் தன்மீக நாதன் என மைந்தர் ஐவர் பிறந்தனர், தேசிகரின் முன்னோர்கள் புலமைச் செல்வர்களாகத் திகழ்ந்தமை போலவே பின்னோர்களும் விளங்கினர் என்பது அறிய வருகின்றது.

இவர்தம் தந்தையார் ஆகிய வன்மீக நாத தேசிகர் தம் பாடு திறத்தால் பரிசாகப் பெற்ற சூனாம்பேட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/412&oldid=1474418" இலிருந்து மீள்விக்கப்பட்டது