பக்கம்:இலக்கண வரலாறு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45. தமிழ் இலக்கணக்கும்மி


புலவர் துரை கனசுசபை என்பவர் பழைய இலக்கணச் செய்தியைப் புதிய யாப்பு வகையில் கூறிய நூல் இது. 1970இல் இந்நூல் வெளிவந்துளது. நூல் இயற்றப்பட்ட நோக்கம், யாப்பு பற்றி நூன்முகத்தில் குறிப்பிடுகிறார்:

“நூற்பாவினால் ஆக்கப்பட்டுக் கடின நடையில் அமைந்த அதனை (நன்னூலை) அவர்கள் (மாணவர்கள்) கற்கும் போதெல்லாம் குன்று முட்டிய குருவியினைப் போன்று பெரிதும் வருந்தி”யதை உணர்ந்து இந்நூல் செய்ததாகக் குறிக்கிறார்.

“எதுகையும் மோனையுமற்று எளிமையும் இனிமையுமின்றி நூற்பா வடிவிலுள்ள அந்த நன்னூலை அதன் வழி நின்றே கவிதை வடிவில் சிறிது மாற்றிய”மைத்தல் நலமென எண்ணினாராம். அதன் வெளிப்பாடே இலக்கணக் கும்மி என்கிறார்.

நன்னூலின் நூற்பா பற்றிய இவர் மதிப்பீடு இது என அமைதலே சாலும்! எளிமைப்படுத்தித் தரவேண்டும் என்ற இவர் நோக்கு பாராட்டுக்குரியது. இதனை நன்னூலுக்கு வழிநூல் என்கிறார். முருகன் அடிமையென மொழிகின்றார். இதனால் இவர் சமயம் புலப்படும்.

இந்நூல் நன்னூலைப்போல் எழுத்திலக்கணம் சொல் இலக்கணம் என்பவற்றை ஐந்தைந்து இயற்படியே பாடுகிறார். கும்மி என்பது தலைப்பில் இருப்பினும் குறவஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/479&oldid=1474835" இலிருந்து மீள்விக்கப்பட்டது