பக்கம்:இலக்கண வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கின்ற வழக்குக் குறிப்புகள் தொல்காப்பியர் உலகியல் வழக்கை நாடி நூல் செய்ததை நிறுவும்.

இனி இருவகை வழக்குகளையும் இணைத்து, ‘வழக்காறல்ல செய்யுளாறே’, 'வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே', 'முடிய வந்த அவ்வழக்கு' என்கிறார். வழக்கு இன்னது என்பதையும்,

“வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான”

என்றும் கூறுகிறார். உயர்ந்தோர் ஒழுக்கமே ஒழுக்கம் எனப்படுவதுபோல, உயர்ந்தோர் சொன்னடை, வழக்கே வழக்கு எனத் தெளிவுறுத்துகிறார். இவற்றையெல்லாம் மேலோட்டமாக அறிவாரும் 'முந்து நூல்' என்பது ஒரு நூல் என்றோ, அஃதகத்தியம் என்றோ கொள்ளார். நூலில் அகச்சான் றில்லாதிருக்கப் பிற்பட்டோர் கூறும் புறச்சான்றுகள் எத்துணையாயினும் எத்தகையர் கூறியவையாவினும் அச் சான்றுகள் முதன்மையுடையனவாகா. இனி, அகச்சான்றுக்கு முரணுவ வாயின் அவை தள்ளத் தக்கனவன்றிக் கொள்ளத் தக்கனவாகா,

‘தொல்காப்பியம்'’என்பது தொன்மையான மொழி மரபு காக்கும் நூல் என்னும் பொருளதேயாம். ‘தொல் காப்பு இயம்’ என்னும் முப்பகுப்பு ஒரு சொல்லினதே அது. அதற்கு எண்ணற்ற சான்றுகள் உள. அவற்றைத் திரட்டிப் பார்த்தல் ஒரு தனிநூற் பார்வையாம். இவண் எடுத்துக் கொண்ட நூன் முறைக்கு ஏற்பச் சில சுட்டுதல் சாலும்.

தொல்காப்பியர் நமக்கு மிகு தொன்மையர் எனின், அவர்க்கும் தொன்மையர் என்பார், நமக்கு எத்தகு தொன்மையர் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

‘முன்னை மரபின் கூறுங்காலை’, ‘தொன்னெறி மரபு’; ‘தொன்னெறி மொழிவயின்’, 'தொல்லோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/59&oldid=1471354" இலிருந்து மீள்விக்கப்பட்டது