பக்கம்:இலக்கண வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

“எழுத்தெனப் படுவ,
அகர முதல னகர இறுவாய்
முப்பஃ தென்ப”

“ஓதல் பகையே தூதிவை பிரிவே”
“வண்ணந் தானே நாலைந் தென்ப”

ஓரியல் யாப்புரவு:

“ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்” என்பது தொல்காப்பியர் வழக்கம்.

“வல்லெழுத் தென்ப கசட தபற”
“மெல்லெழுத் தென்ப ஙஞண நமன”
“இடையெழுத் தென்ப யரல வழள”

சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல்:

ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம்.

“அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே”

என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க.


இ.வ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/94&oldid=1471411" இலிருந்து மீள்விக்கப்பட்டது