பக்கம்:இலக்கியக் கலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 9 இலக்கியத்தின் கடப்பாடு இலக்கியம் கடந்த காலத்தின் கன்னி, - நிகழ்காலத்தின் மன்ன்வி, எதிர்காலத்தின் தாய் என்பதை முன்னரே கண்டோம். அவளுக்குச் சில கடமைகள் உள்ளன. சங்க காலத் தாயருள், ஒருத்தி ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே' என்று அறிவித்துள்ளதை நாம் யாவரும் அறிவோம். . . . இதைப் போன்றே, இலக்கியமாகிய கன்னிப் பருவத் தினளுக்கு இல்லத்தரசியாய்ப் பெருவாழ்வு பெறுபவளுக்கு ஈன்ற குழவியைக் கருத்தாகப் போற்றி வளர்க்கும் தாய்க்குத் தனிப்பட்ட உரிமைகளும் கடமைகளும், ஒவ்வொரு சமுதாயத்தி லும் இருந்து வருகின்றன. * . . . . . . . தன்னிப் பெண், கவர்ச்சியே. வடிவானவள், கள்ளங்கபடம் அற்றவள் இனிமையும் எழிலும் நிறைந்தவள். இல்லத்தரசியோ, பொறுப்புடன் கடமைகளைச் செய்து, கணவனுக்கு இன்பம் அளித்து, இல்லறத்தை நல்லறமாக மாற்றுபவள்; கொஞ்சு மொழியால், கொழுநனைத் திருத்தி, நெறிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவள். தாய், வற் றாத அன்பின் ஊற்று கைம்மாறு கருதாமல் பிள்ளைகளைப் போற்றி வளர்க்கும் பெருந்தியாகி. இந்த மூன்று பருவங்களையும், ஒருங்கே வாய்க்கப் பெற்றுள்ளது. இலக்கியம். ஒரே ೧೬೯y, ಡ್ರೀDற்கண்ட மூன்று பருவத்தினளின் பண்புகளை, ஒருங்கே பெற்று விளங்குவது உண்டு. இதைப்போல, இலக்கியமும் எழிலார்ந்த இனிமையும், கவர்ச்சியும் உடையதாக இருப்பது, அதனுடைய் கடப்iாடுகளுள் ஒன்றாகும். 'இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை!" எனும் முதுமொழிக்கு இணங்க, இல்லத் த்ர்சியின் பண்புகளாகிய இன்புறுத்துவதோடு, நலமிகு சொற்களால் அறிவுறுத்துவதும் இலக்கியத்தின் சிறப்புமிகு கடப்பாடாகும். அடுத்துத் தாயின் அன்பு, பிள்ளைகள் அளவில் நிற்காமல், விரிந்தும், பரந்தும் உலகளாவியதாக மாறுவது: அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/132&oldid=750939" இலிருந்து மீள்விக்கப்பட்டது