பக்கம்:இலக்கியக் கலை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இலக்கியக்கலை கம்பனுடைய பாடல்கள் பல, அழகுணர்வின் வெளிப் பாடாக அமைந்து இருப்பதை நாம் அறிவோம். வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதி.யின்மறைய பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் - போனான் மையோர் மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? ஐயோ இவன் வடிவு?’ என்பது ஒர் அழியா அழகுடையான் (கம்ப. கங்கை.1) இப்பாடலில் அனுபவ உணர்வு படிமக் காட்சிகளையும், இனிய ஒலி நயத்தையும் கொண்ட அழகிய சொல்லோவியமாகச் செஞ்சொற்கவியின்பம் பயக்கிறது’ ஆனால், தமிழில் உள் ள இலக்கியப் படைப்புகள் யாவும், அழகுணர்வின் தூண்டுதலாலேயே படைக்கப்பட்டன எனக் கூற இயலாது. - இந்தியச் சிந்தனையில், அழகைவிட பயன்பாடே கலைப் படைப்பின் தலையாய பண்பாகப் போற்றப்படுகிறது. இதற்குத் தமிழ் இலக்கியம் விதிவிலக்கு அன்று. - இவ்விருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளர்களுள், அழகியல் கொள்கையின்வழி இலக்கியம் படைப்போர் விரல் விட்டு எண்ணக் கூடியவராகவே உள்ளனர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவியோகி ச. து. சு. யோகியார், பேராசிரியர் அ. சீனிவாசராகவன் போன்றோர் அழகுணர்வின் உந்துதலுக்கு ஆட்பட்டு, கவிதைகள் சிலவற்றைப் படைத்துள்ளனர். . தமிழ்மொழியைப் பொறுத்தவரை இலக்கியக் தோற்றத் திலும், இலக்கியத் திறனாய்விலும் அழகியல் கொள்கை" தன்னுடைய முத்திரையைப் பொறிக்கவில்லை எனக் கூறினால், இது தவறாகாது. - 3. சமுதாயக் கொள்கை இவ்விருபதாம் நூற்றாண்டின் தனிப்பெருஞ் சிறப்பு சமுதாய விழிப்புணர்ச்சி'யாகும். இதன் விளைவாகச் சமுதாயத் orgaria (Social Consciousness), pissi, வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் இயக்கி வருகிறது. " வரலாற்று அடிப்படையிலும் பரிணாம வளர்ச்சிமுறை யிலும் இலக்கியக் கொள்கைகள், தோன்றி வளர்ந்துள்ள்ன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/146&oldid=750954" இலிருந்து மீள்விக்கப்பட்டது