பக்கம்:இலக்கியக் கலை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146; இலக்கியக் கலை வேண்டும். ஆழமும் அகலமும் உடைய கல்வி பெற்றிருந்தால் ஒழியத் திறனாய்வு வேலையைச் செம்மையாகச் செய்தல் இயலாது. நம்மைவிடச் சிறந்த அறிவுபெற்ற அவன். நாம் கற்கும் இலக்கியத்தையே கற்றாலும் நாம் கண்டுங் காணாத வற்றை யெல்லாம் காண்பவன்ாகிறான். அத்தகையவன் இலக்கியத்தின் ஆழத்தையும் மறைந்து கிடக்கும் அழகையும், பல இலக்கியங்களையும் கற்றவனாகலின், இவ் விலக்கியம் கூறும் உட்பொருளையும் அறியும் வன்மைபெற்றவனாக ஆகிறான். மிகச் சிறு அடிகள் இரண்டில் ஒர் இலக்கிய ஆசிரியன் தன் வாழ்நாள் எல்லாம் செலவிட்டுக் கண்ட ஒர் உண்மையை வெளியிட்டிருப்பான். அக் கருத்து மிகப் புதிய தாக இருத்தல்கூடும், ஆனால் அவ் விலக்கியமும் தோன்றுதற்கு முன் உள்ள இலக்கியங்களைக் கற்ற ஒருவனே இப் புதுக் கருத்தைக் காண்பதோடு இது புதியது என்ற உண்மையையும் அறிதல் கூடும். இவ்வாறு சிறந்த திறனாய்வாளன் நமக்குப் புதியதான ஒர் உண்மையை எடுத்துக்காட்ட வல்லவனாக இருத்தல் வேண்டும். பல க ரு த் துக் க ள் ந ம் ம ன த் தி ல் ஏற்கெனவே பணிப்படலம்போல் தோன்றி வடிவு பெறாமல் இருத்தல்கூடும். அவற்றிற்கெல்லாம் வடிவு தருபவனாகவும், புதியவழி வகுக்கும் பெற்றிவாய்ந்தவனாகவும், நம் ஐயங்களைப் போக்கும் தெளிந்த அறிவுடையவனாகவும், இருப்பவனே சிறந்த திறனாய்வாளன் எனப்படுவான், பல சமயங்களில் நம் மனத்தில் ஏற்கெனவே படிந்துள்ள கொள்கைகளை மறுத்து உண்மை புகட்டுவதோடு மேலும் ஆராய்ச்சி செய்யுமாறு நம்மைத் துரண்டு பவனாகவும் இருப்பவனே திறனாய்வாளன். இத்தகைய திறனாய் வாளன் எழுதிய நூற் கருத்துக்களுடன் நாம் உடன்பட்டாலும், உடன்படாவிட்டாலும் அவனைப் படிப்பதால் பெரும்பயன் அடைதல் கூடும். இனி, இத்தகைய திறனாய்வாளன் மேற்கொள்ளும் திறனாய்வு எத்தகையது என்பது ஆராயப்படும். 1. Judgement. 2. புறம். 192.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/158&oldid=750967" இலிருந்து மீள்விக்கப்பட்டது