பக்கம்:இலக்கியக் கலை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இலக்கியக் கலை அவனுடைய கலை மனப்பான்மையை என்றும் வெளியிடும் கருவூலங்களாக அவை உள்ளன. என்றாலும் என்ன? பொறிகள் வழி நின்று வாழ்க்கையை அனுபவிக்கும் கலைஞனாக இருந்த தமிழன், அறிவின் துணைகொண்டு மனத்தைத் துருவி ஆராயும் வாய்ப்பை இழந்துவிட்டான்போலும்! கலை மனப்பான்மை படைத்த இவனுக்கு அநுபவிக்கும் பொருளில் தன்னை மறந்து. ஈடுபட இயன்றதே தவிர, தன்னைப் பிரித்துக் கொண்டு பொருளை ஆராய வகை இல்லாமல் போயிற்று. இன்பம் காண்பதையே பெருநோக்காகக் கொண்ட இவன், அவ்வின்பத்தின் இயல்பை ஆராய முற்படவில்லை. இதன் பயனர்க, அன்றும் இன்றும் தமிழில் திறனாய்வு நூல்கள் தோன்றவில்லை. இலக்கியம் என்றால் யர்து? அது எவ்வாறு பிறக்கிறது? என்பவற்றை ஒரளவு கண்டுள்ளோம். ஆகலின் இனி அவ்விலக்கியத்தின் சிறந்த பகுதியாகிய கவிதை பற்றியும், அதன் அமைப்பு, வடிவம், உட்கோள் என்பவை பற்றியும் சற்று விரிவாகக் காண்போம். 1. குறள், 772. г. - 2. Dr. Johnson in The Rembler.' No. 3 3. Judicial criticism. 4. Inductive criticism, 5. Tragedies 6. Homer's Odyesey. 7. தொல். செய்யுளியல் 24. 8. Historcal criticism. 9. Appreciative criticism 10, Analytical criticism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/167&oldid=750977" இலிருந்து மீள்விக்கப்பட்டது