பக்கம்:இலக்கியக் கலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 · இலக்கியக் கலை மேலே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று புத்தகங்களையும் பயன் LITL® (Navê®unh" (Utilitarian Literature) Grgrá FLLgvrrih. ஆனால். பாரதியாரின் கவிதை நூலோ, கற்பனை இலக்கியம்' (Imaginative Literature) Granrajth, ‘Līgol–Lill Govistulħ' (Creative Literature) எனவும் போற்றத்தக்கதாகும் இச் சிறு விளக்கத் திலிருந்து இலக்கியம் என்பது யாது?’ என்பதை ஒருவாறு உணர இயலும், சொல்லும் பொருளும் o இலக்கியம் என்னும் சொல்லின் பொருளைப் புரிந்துகொள்ளு வதற்கு, அச்சொல்லை ஆராய்ந்து, அதன் நுட்பமான பொருளைக் காணுதல், நலம் பயக்கும். தமிழில் இன்று பெருவழக்காக உள்ள 'இலக்கியம்’ எனும் சொல்லைத் தொல்காப்பியனார் பயன்படுத்த வில்லை. திருவள்ளுவருக்குத் தெரியாத சொல் இது. காப்பியக் கலைஞர்களான இளங்கோவடிகளும் கம்பனும் கேட்டறியாத சொல்லாக இருந்துவருவது இச்சொல், முதன்முதல் மாணிக்க வாசகரால் இலக்கிதம்' எனும் வடிவில், இச்சொல் வழங்கப் பட்டுள்ளது. 'பேசும் பொருளுக்கிலக்கிதமாம்” எனும் அடியினில், (திருவா. 632)-நாம் கருதும் கலைப் படைப்பு எனும்பொருளில் - இச்சொல், நாம் நினைக்கும் இலக்கியம்’ எனும் நூலினைச் சுட்டவில்லை. - பொதுவாக மேற்கோள் எடுத்துக்காட்டு பிரமாணம்' எனும் பொருளிலேயே இச்சொல் வழங்கப்பட்டு இருப்பதைக் காணு கின்றோம்.இந்தப் பொருளில் இவருக்குப் பிறகு (கி.பி. 8-ம் நூ.ஆ) வந்த இலக்கண. உரையாசிரியர்கள் எல்லாரும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். ೯.೨. பத்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினோராம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவராக அறியப்படும் நம்பியாண்டார் நம்பிகளுடைய ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’ எனும் நூலில், - வரலாறு பிழைப்பினின் வாழியிலக்கிதமாம்" (திருமுறை எனும் தொடர் இடம் பெற்றுள்ளது. இங்கும். பொருளிலேயே இச்ச்ொல் வழங்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/18&oldid=750991" இலிருந்து மீள்விக்கப்பட்டது