பக்கம்:இலக்கியக் கலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 167 இந்த அளவுகோல்களுள் அடங்காத ஒன்று, அவனாக வேண்டு மென்று சில பொருள்களைப் படைத்துக்கொள்ளலாம். அவை நம்ம்ால் நம்ப முடியாதவையாக இருக்கலாம், ஆனால் அவ்ன் அதுபற்றிக் கவலுவதில்ல்ை. அவன் மனத்தில் தோன்றிய எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கப் பல சாதனங்கள் தேவையா யிருக்கலாம், அச் சாதனங்களுள் சில ஏனையோர் நம்ப இயலாதன வாயும் இருக்கலாம். பிறர் நம்புதற்கு இயலாதவை என்று கூறும், பொருள்கள் அவன். நம்புகின்றவையாயிருக்கலாமல்லவா? ஆகவே அவனாக ஏற்படுத்திக்கொண்ட சட்டதிட்டங்கட்கு உட்பட்டுச் செல்லுகிறவரையில் அவன் எந்தப் பொருளை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் என்ன? அப்பொருள்களை வைத்துக்கொண்டுதான் அவன் கலை முற்றுப்பெறுமென்றால் அதனை யாரும் தடுக்க இயலாது. முடிந்த பொருளாக உள்ள கவிதை பயனுடையதாக இருக்குமேயானால், அக்கவிதையை ஆக்கும் வண்ணம் அவன் கற்பித்துக்கொள்ளும் பொருள்கள் மெய்ம்மையானவையா என்று நாம் ஆராயவேண்டிதில்லை. கோசல நாட்டைக் கற்பனையில் காண்கி prir ஒரு கலைஞன். அக்கனவு நாட்டை வருணிக்கிறான். - - "நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும்மேதி தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்" (கம்ப. நாட்டு : 6) என்று கூறுவானேயானால், இவை மெய்ம்மையர் என்ற 'ஆராய்ச்சியை அங்கு நடத்துவது அறிவுடைமையாகாது. கூறவந்த கருத்து, நீர்வளம், நிலவளம், மக்கள்வளம் என்பவையேயர்ம். ஆனால் அவற்றை நேரடியாகக் கூறின் அது கலையாகாது. எனவே, கலைஞன் இவ்வழியைக் கையாண்டு, கேட்போருக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறான். - அவனாக ஏற்படுத்திக்கொண்ட சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நிற்கின்றவரையில் அவனுடைய கற்பனைகளைத் தவறு என்றோ, வாழ்க்கைக்குப் பயன்படாதவை என்றோ கூறுவது கவிதையைப் பற்றி அறியர்தார் கூற்றேயன்றிவேறில்லை. இங்ங்ணம் கூறுவதால் நாம் காணும் இவ்வுலகைக் கலைஞன் கவிதைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்லை. வேண்டுமானால் அவன் அவ்வாறு செய்யலாம். தொழிலாளர் துயரத்தை வைத்துப் பாரதிதாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/184&oldid=750996" இலிருந்து மீள்விக்கப்பட்டது