பக்கம்:இலக்கியக் கலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கவிதையும் சொல்லும் கவிதைக்குக் கற்பனை எவ்வளவு இன்றியமையாதது என முன்பு கண்டோம். கலைஞனிடம் தோன்றுகிற அவ்வரிய கற்பனையை நமக்குப் பகிர்ந்து அளிப்பது. அவன் இயற்றிய கவிதையிலுள்ள சொற்களேயாம். கவிதையில் அச்சொற்களின் வேலை என்ன? அவ்வேலையை அவை எவ்வாறு செய்கின்றன? இவற்றை ஓரளவு ஆராயவேண்டும். சொல்லும் பொருளும் சொற்கள் என்றால் என்ன? இக்கேள்வி நம்மில் பலருக்கு மிகச் சாதாரணமானதாகக் காணப்படலாம். ஏனென்றால், சொற்கள் எழுத்துக்களாலானவை என்பதும், அவை பொருளை உணர்த்தும் என்பதும் நாம் இளமையில் கற்ற பழம் பாடம். அவை எவ்வாறு பொருளை உணர்த்துகின்றன என்பதுபற்றி நம்மில் பலர் நினைப் பதில்லை. நினைக்கின்ற அச் சிலரும், காரணங் கருதியும், காரணங் கருதாமலும் பெரியோர் பொருள்களைக் குறிக்கச் சொற்களை வழங்கினர்; ஆதலால் இன்று நாமும் வழங்குகிறோம்' என்று முடிவு கட்டிவிடுகின்றனர். ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த உயர்தர நீதிமன்றத்துத் தலைவர் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்ற பெரியார் ஒரு வழக்கில் தமது தீர்ப்பைக் கூறுமுன் இங்ங்ணம் கூறுகிறார். 'சொற்கள் வைரம் முதலான மணிகளைப் போன்றவையல்ல. ஏனெனில் மணிகள் என்றும் ஒளி மாறாமலும், ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மை படைத்தும் உள்ளன. ஆனால் சொற்கள் அவ்வாறு மாறாத தன்மையுடையவை அல்ல. அவை உயிருள்ள நினைவுகள் என்னும் தோல் போர்த்தவை. கால தேசத்தை ஒட்டியும், தம்மைப் பயன் படுத் துபவ ன து மனநிலையை ஒட்டியும், சொற்கள் பொருள்திறத்தில் மாறும் தன்மை புடைத்தவை. இதனால் ஒரு சொல் ஒரு பொருளைக் குறிப்பதற்காக எழுந்தது என்ற நிலைமை மாறி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/191&oldid=751004" இலிருந்து மீள்விக்கப்பட்டது