பக்கம்:இலக்கியக் கலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்விைதயும் சொல்லும் f7; ஒரு சொல் பல பொருளைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உணர்த்தும் என்று ஆகிறதல்லவா? * . . . . ” இந்நிலையில் சொற்களையும் அவற்றின் உதவியால் தோன்றும் கவிதைகளையும் காண்போம். கவிதை கேட்போரின் காதுகளுக்கு வேலை கொடுப்பது. - : கவிதை உரை நடை வேறுபாடு - உரைநடை எழுதுபவன் படிப்போரின் காதுகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஆனால் சொற்பெ ாழிவு செய்கிறவன் எவ்வாறு சே ட்போரின் காதுகளில் செம்மையும் இனிமையும் உடைய ஒலிகள் சென்று. விழவேண்டுமென்று நினைக்கிறான்ே அவ்விதமே கவிஞனும் நினைக்கிறான். கவிதையை ஏட்டில் எழுதினாலும் அது படிப்பவர் காதுகளுக்கே என நினைக்கிறான். எனவே கவிதையைப் படிப்பதற்குரிய செம்மையான முறை உரக்கப் படித்தலேயாகும். அங்ங்ணம் படித்தால்தான் கலைஞனது முழு உணர்ச்சிய்ையும் நாம் பெறமுடியும். கவிதையின் சொல்லும் கருத்தும் மனத்தில் சென்று தங்குவதற்கு அதனை மனத் திற்குள்ளாகவே படித்துக்கொண்டால் நேரும் குறை என்ன என்று கேட்கலாம். அதனால் ஒரு பெருங்குறை நேருகிறது. கவிதையை அச்சடித்த கடிதத்தில் படிக்கிறோம். அதில் பயிலும் சொற்கள் காதுகளின் தன்மை நோக்கி ஒரு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இச் சொற்கள் தமக்குரிய நேரடியான பொருள்களை மட்டுமல்லாமல் வேறு சில பொருள்களையும் கொண்டுள்ளன. கவிஞன் பாடலில் முக்கியமாக இரண்டு பொருள் களைக் கூறுகிறான். ஒன்றைச் சொற்களின் ஒசையாலும், மற்றொன்றைச் சொற்களின் அகரர்திப் பொருளாலும் அறிவிக் கிறான். உதாரணத்தால் இதை நன்கு அறியலாம். கும்பகன்னன் உறங்கிக்கொண்டு இருக்கிறான். இராவணன், ஏவலால் நூற்றுக் கணக்கான வீரர்கள் அவன் இருபுறங்களிலும் வந்து நின்றுகொண்டு இருப்பு உலக்கைகள்ால் இடிக்கிறார்கள். அவர்கள் இடிக்கும் ஒலியை, மாறி மாறி இடிக்கும் ஒலியைக், க்விஞ்ன் நடிக்குப் பாடலின் ஒசைமூலம் காட்டுகிறான். . உறங்குகின்ற கும்ப கன்ன் உங்கள் மாய வாழ் வெலாம் : இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/192&oldid=751005" இலிருந்து மீள்விக்கப்பட்டது