பக்கம்:இலக்கியக் கலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே உறங்கு வாய் உறங்கு வாய் இனிக் கிடந்து உறங்குவாய்: (கும்ப-படலம்-45.) (துங்குகிற கும்பகன்னனே! உங்களுடைய மாய வாழ்க்கை இதோ முடியப்போகிறது. வேகமாகச் செல்லும் அம்புகளைக் கையில் ஏந்திய எமபடர்கள் போன்ற வீரர்களின் கையிற் படுத்து இனி உறங்குவாய் என்று தம்முள் பாடிக்கொண்டு அவ்வீரர்கள் அவனை எழுப்புகின்றனர்.1 மேலே அடையாளமிட்டுள்ள குறியீடுகளைக் கவனியாது பாடலை மனத்துள் படித்துப் பார்த்தால் சொற்களின் பொருள் தெரியக் காண்கிறோம். இனி அடையாளமிட்டுள்ள எழுத்துக்களில் அழுத்தம் தந்து, உரக்கப் படித்தால் ஒரு புதிய தன்மை வெளிப் படும். முன் இரண்டு அடிகளை ஒரு புறத்தில் இருப்பவர்.சொல்லி அவன்மேல் உலக்கைகளால் இடிக்கப், பின்னிாண்டு அடிகனை மறுசாரார் சொல்வி இடிப்பது தோன்றுகிறதல்லவா? இதனைக் கவிஞன் சொற்களாற் கூறவில்லை. ஆனால் அவன் பயன்படுத்திய சொற்களின் ஒசையால் கூறிவிட்டான். நான்கு அடிகளில் 40 வல்லின எழுத்துக்களைப் பயன்படுத்தியதன் மூலம் கூறிவிட்டான். இதனால் கவிஞன் காதுகளையே தன் உணர்வுக்கு ஆதாரமாகக் கொண்டு பாடுகிறான் என்பது எளிதில் விளங்கும். காதுகளை நம்பியே கவிதை தோன்றிற்று என்பது எல்லா மொழிக் கவிதைக்கும் பொதுச் சட்டமாயினும் தமிழ்மொழியளவில் இது மிக இன்றியமை யாதது. ஆங்கிலக் கவிதைகளில் அழுத்தம் எங்குத் தரப்பட வேண்டும் என்பதை எழுதிக்கூட ஒரளவு காட்டலாம். ஆனால் தமிழ்க் கவிதையில் இது இயலாத காரியம். என்றாலும் ஓசையை நம்பித்தான் தமிழ்க் கவிதைகள் நடைபெறுகின்றன என்பதைத் தமிழர் வகுத்த பாடற்பிரிவானும் அவற்றின் ஒசைப் பெயர் களாலும்கூட அறியலாம். துள்ளலோசை, துங்கலோசை, ஒழுகலோசை, செப்பலோசை என்பன பாடல்களைக் கண்ணால் பார்த்து அறியக் கூடியன வல்லவே! - - உண்ர்வுச் சொற்கள் பாடல்கள் எவ்வாறு உணர்ச்சியூட்டுகின்றன: 45ಟಿ பொருளையும் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் உணர்ச்சியைக் கற்பனை செய்துகொள்ளுதல் இயலாத காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/193&oldid=751006" இலிருந்து மீள்விக்கப்பட்டது