பக்கம்:இலக்கியக் கலை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் சொல்லும் of 85 பயன்படுத்துகிறோம். தனக்குத் தோன்றும் உணிச்சியை நேரடியாக ஒரு சொல்லால் வெளியிடும் சக்தியை நாகரிக மனிதன் இழந்துவிட்டான். ஆனால் இதிலிருந்து பெற்ற பயனும் பெரிதா யிற்று. பழைய மனிதன் ஒரு சொல்லால் கூறினானே தவிர, அவ்வுணர்ச்சி அளவில் குறைந்திருந்த காலத்தும், கூடிய காலத்தும் அவ்வேற்றுமையை வெளியிட முடியாமல் தவித்தான். ஆனால் நாகரிக மனிதன் அதே உணர்ச்சியின் பல்வேறு நிலைகளை, பல்வேறு மொழிகளைச் சேர்ப்பதன் மூலம் தெரிவிக்கும் ஒரு நிலையை அடைந்தான். அதாவது ஆதி மனிதன் புலியைப் பயமாகிய உணர்ச்சியைத் தரும் சொல்லாலும், மனைவியை அன்பாகிய உணர்ச்சியைத் தரும் சொல்லாலும் குறித்ததாக வைத்துக்கொள்வோம். நாகரிக மனிதன் புலி, மனைவி என்ற இரண்டு சொற்களையும் கண்டு அவற்றோடு ஒட்டிக்கொண்டிருந்த பயம், அன்பு என்ற இரண்டு உணர்ச்சிகளையும் பிரித்து எடுத்து விட்டான். அதனால் பய உணர்சியைத் தூண்டாத புலிக்கும், அன்பில்லாத மனைவிக்கும் இரு பெயர்கள் |- های شایانی அம்மட்டோடில்லை. இவ்விரு சொற்களையும் வைத்து இவற்றின் மேல் தான் விரும்பிய உணர்ச்சியை ஏற்றவும் புது மனிதனுக்கு இயன்றது புலியினிடத்து அன்பும், மனைவியினிடத்து அச்சமும் கொண்டிருந்தால், ஆதிமனிதன் அதை வெளியிட முடியாமல் தவித்திருப்பான். ஆனால் நாகரிக மனிதன் இந்த நிலையை நன்கு கூறல் இயலும். இதுவே நாளடைவில் மொழி பெற்ற சிறப்பு மேலும் புலி என்ற சொல்லில் இயற்கையாகவே அச்சம் என்ற உணர்ச்சி சிறிது ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வுணர்ச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் சுருக்கியும் பெருக்கியும் கொள்ளக் கூடிய ஒரு நிலைமை தற்கால மனிதனுக்கு ஏற்பட்டது. : இந்நிலை யில் அம்மொழிக்குப் பிரிநிலைமொழி என்று பெயர் வரலாயிற்று. எனவே எவ்வளவுக்கு மொழி வளர்ந்து பிரிநிலை, மொழி என்ற தன்மையை அடைகிறதோ அவ்வளவுக்கு அது கவிதைக்கு ஏற்ற மொழியாகிறது. . .. - - - - புதுச்சொல் பிறத்தல் இவ்வளர்ச்சியினாலேயே சொற்கள் மதிப்பை அடை கின்றன என அறிகிறோம். அங்கன்ம் அவை பெற்றமதிப்பு எங்ங்ணம் வளர்கிறது எனவும் ஆராயவேண்டும். பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒரு செயலில் ஈடுபடுவதாக வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/203&oldid=751017" இலிருந்து மீள்விக்கப்பட்டது